காதலை நிராகரித்த இளம் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று தீ வைத்து எரித்த காதலன்..

கோப்புப்படம்.

காதலித்த தன்னை விட்டு வேறொருவருடன் பழகியதால் 19 வயது இளம் பெண்ணை காதலன் எரித்துக்கொன்ற கொடூரம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்தவர் 19 வயதான சினேகலதா. மாவட்ட அளவில் ஹாக்கி வீராங்கனையாக திகழ்ந்த சினேகலதா, தனது பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த ராஜேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு மேல் பழகி வந்துள்ளார்.

  கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஒப்பந்த ஊழியராக சினேகலதாவுக்கு வேலை கிடைத்தது. வங்கி வேலை கிடைத்ததில் இருந்து சினேகலதா, ராஜேஷுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல் பணி முடிந்து புறப்பட்ட சினேகலதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்த பெற்றோர், தர்மாவரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்றனர்.

  ஆனால் காவலர்களோ உன் மகள் குழந்தை இல்லை; வீடு திரும்பி விடுவார் நாளை பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் தர்மாவரம் சாலையோரம் முட்புதரில் சினேகலதா பாதி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

  Also read: ’தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்படுகிறோம்’ - தரையில் அமர வைக்கப்பட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்கள்

  போலீசார் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், ராஜேஷ் என்பவரிடம் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. ராஜேஷைப் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தன்னைக் காதலித்து வந்த சினேகலதா வங்கி வேலை கிடைத்த பின் தன்னை நிராகரித்துவிட்டு வேறொரு நபருடன் பழகியதால் ஆத்திரமடைந்துள்ளார் ராஜேஷ்.

  வியாழன் அன்று பணி முடிந்த பின்னர் வெளியில் வந்த சினேகலதாவுடன் பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தடயங்களை அழிக்க பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாகவும், அது பாதியில் அணைந்து போனதால் கொலை வெளியில் தெரியவந்ததாகவும் வாக்குமூலத்தில் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: