ஆந்திரப் பிரதேசத்தில் மலையிலிருந்து கவிழ்ந்த பேருந்து: 8 பேர் பலி: 10 பேர் காயம்

ஆந்திரப் பிரதேசத்தில் மலையிலிருந்து கவிழ்ந்த பேருந்து: 8 பேர் பலி: 10 பேர் காயம்

ஆந்திர பிரதேச விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மலைப்பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 • Share this:
  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலுள்ள வனப்பகுதியில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஐந்து முறை பல்டி அடித்து நொறுக்கியது.
  இந்த விபத்தில் 8 பேர் பலியாகி நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

  விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து நடைபெற்ற பகுதியில் கடும் இருட்டு நிலவுவதால் மீட்ப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விசாகப்பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: