ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியில் 12515 எண் கொண்ட கோயம்புத்தூர் - சில்சார் வாராந்திர அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. நடுவழியில் பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அதிலிருந்து இறங்கி, ரயில் தண்டவாளங்களை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த மும்பை கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளங்களை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், அந்த பகுதியில் இருப்பவர்கள், ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி, நடுவழியில் இறங்கி, இதுபோல் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Train Accident