மாஸ்க் இல்லாமல் வந்ததால் கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ - சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு

மாஸ்க் அணியாமல் வீதியில் நடமாடியவர் மீது போலீஸ் எஸ்ஐ கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நிலையில், படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாஸ்க் இல்லாமல் வந்ததால் கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ - சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
போலீஸ் எஸ்.ஐ | உயிரிழந்த இளைஞர்
  • News18
  • Last Updated: July 22, 2020, 2:43 PM IST
  • Share this:
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரை சேர்ந்தவர் கிரண்குமார். கடந்த 19-ம் தேதி முகக் கவசம் அணியாமல் வீதியில் நடமாடிய கிரண் குமாரை தடுத்து நிறுத்திய சீராலா காவல் நிலைய போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த கிரண் குமாரை உறவினர்கள் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து சென்று குண்டூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கிரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

படிக்க: சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி


படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
கிரண் குமாரை தாக்கி அவருடைய மரணத்திற்கு காரணமான போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் மீது, வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மரணமடைந்த கிரண்குமார் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading