ரூ. 200 கோடி மதிப்புள்ள கஞ்சாவை ஆந்திர போலீசார் தீயிட்டு கொளுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலத்தில் அதிகளவு கஞ்சா புழக்கத்தில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கும் கஞ்சா சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஆந்திர காவல்துறை டிஜிபி கவுதம் சவாங் கூறுகையில், 'மாவோயிஸ்டுகள்தான் கஞ்சா பயிரிடுவதை மக்களிடையே ஊக்கப்படுத்தி வந்தனர். அந்த வகையில் ஒடிசாவில் 23 மாவட்டங்களிலும், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 மண்டலங்களிலும் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தன.
இதையும் படிங்க - மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்... பரபரப்பு
இதனை தடுப்பதற்காக பரிவர்த்தன் 406 என்ற ஆப்ரேஷனை ஆந்திர போலீசார் மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் 11 மண்டலங்களில் 313 கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரா - ஒடிசா எல்லையில் கடத்தப்படவிருந்த கஞ்சா பலமுறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!
இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க -
ஊர் சுற்றலாம் வாங்க! டெல்லியிலிருந்து லண்டன் வரை அழைக்கும் சுற்றுலா நிறுவனம்.! கட்டணம் தெரியுமா.?
நேற்று சுமார் 2 லட்சம் கிலோ எடை கொண்ட கஞ்சா அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 200 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.