Home /News /national /

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி

ரோஜா

ரோஜா

Actor roja: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

    புதிதாக அறிவிக்கப்பட்ட ஆந்திரா அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால்  நகரியில் ரோஜா வீட்டின் முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இரண்டரை ஆண்டு காலத்திற்கு முன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அமைச்சரவையில் 24 அமைச்சர்களை நியமித்தார். அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்  அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். மாற்றி அமைக்கப்படும் மந்திரிசபையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படும் என்று கூறினார்.

    அதனடிப்படையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது... பக்தர்கள் போராட்டம்


    அந்த பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் முதன் முதலாக ரோஜா அமைச்சராகி இருக்கிறார். எனவே நடிகை ரோஜாவாக இருந்து அரசியல்வாதி ரோஜாவாக அவதரித்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவாக உயர்வு பெற்று ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு தலைவராக வளர்ச்சி கண்டு தற்போது அமைச்சர் ரோஜாவாக அவர் உயர்ந்திருக்கிறார் . ரோஜா அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளதையடுத்து நகரியில் உள்ள ரோஜா வீட்டின் முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவரது  ஆதரவாளர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actress Roja, Andhra Pradesh, Minister

    அடுத்த செய்தி