Home /News /national /

விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!

விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!

Tirupati Airport

Tirupati Airport

ரேணிகுண்டா விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏவின் மகனும், திருப்பதி துணை மேயரான அபிநய ரெட்டிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

    அதிகாரிகள் விமான நிலையத்துக்குள் அனுமதி மறுத்த நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் திருப்பதி விமான நிலையத்துக்கான தண்ணீர் சப்ளையை துண்டித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    ரேணிகுண்டா விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏவின் மகனும், திருப்பதி துணை மேயரான அபிநய ரெட்டிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் திருப்பதி விமான நிலையத்திலும், விமான நிலைய ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதியில் தேசிய அளவிலான கபடி போட்டித்தொடரின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திர அமைச்சர் போட்சா சத்யநாராயணா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் திருப்பதி விமான நிலையத்துக்கு வந்தனர். இருவரையும் வரவேற்பதற்காக திருப்பதி துணை மேயரான அபிநய ரெட்டி விமான நிலையம் சென்றிருந்தார். இவர் ஆளும் ஒய்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கருணாகர் ரெட்டியின் மகன் ஆவார்.

    Also read:  Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!

    விமான நிலையத்தில் அபிநய ரெட்டி மற்றும் அவரின் உதவியாளர் இருவரையும் நுழைய மேலாளர் சுனில் அனுமதி மறுத்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவத்துக்கு பின்னர் தான், திருப்பதி விமான நிலையத்திலும், விமான நிலைய ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. இது எம்.எல்.ஏவின் மகனின் செயலாக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், பைப்லைனில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே தண்ணீர் சப்ளை தடைபட்டதாக திருப்பதி நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    Also read:  நோயாளிகளின் கல்லீரலில் நூதனமாக ஆட்டோகிராஃப் பொறித்த மருத்துவர் - அதிர்ச்சித் தகவல்கள்

    எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் ட்விட்டரில் அபிநய ரெட்டியை விமர்சித்து, “விமான நிலையம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது ஒய்எஸ்ஆர்சிபியின் அராஜக ஆட்சிக்கு சான்றாகும். இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    Also read:   Corona | இந்தியாவில் தடாலடியாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

    இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சிந்தியாவுக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் பாஜக எம்.பி நரசிம்ம ராவ். அவரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கையை எடுப்பதாக கூறியுள்ளார்.

     
    Published by:Arun
    First published:

    Tags: Tirupathi

    அடுத்த செய்தி