Home /News /national /

திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு 140 பேருடன் வந்து அதிர்ச்சி தந்த அமைச்சர்.. வெடித்த சர்ச்சை..புலம்பும் பக்தர்கள்!

திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு 140 பேருடன் வந்து அதிர்ச்சி தந்த அமைச்சர்.. வெடித்த சர்ச்சை..புலம்பும் பக்தர்கள்!

140 பேருடன் விஐபி தரிசனம் செய்த அமைச்சர்

140 பேருடன் விஐபி தரிசனம் செய்த அமைச்சர்

ஆந்திர மாநில அமைச்சர் ஒருவர் திருப்பதியில் 140க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்தவரை காலை நேரத்தில் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்களை வாங்கி வருபவர்கள் ஆகியோருக்கு விஐபி தரிசனம் மூலம் தலா ரூ.500 கட்டணத்தில் ஏழுமலையானை வழிபட டிக்கெட் வழங்கப்படும்.

    இது தவிர தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பவர்கள் கூடுதலாக ரூ.500 பணம் செலுத்தி டிக்கெட் பெற்று விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் எத்தனை பேர் வேண்டும் என்றாலும் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.

    ஆனால் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு அவருடைய சொந்த பரிந்துரையின் பெயரில் அதிகபட்சமாக ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.இது தவிர மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் பரிந்துரை கடிதங்களில் பெயரிலும் ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்படும். இதுவே சாதாரணமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும்.

    பக்தர்கள் யாராவது விஐபி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களை வாங்கி வந்தால் அதில் ஆறு பேருக்கு மேல் ஒரே ஒருவரின் பெயர் இருந்தால் கூட திருப்பதி மலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் அந்த கடிதத்தை திருப்பி அனுப்பி விடுவார்கள். அல்லது அதில் உள்ள ஏதாவது ஒரு பெயரை நீக்கும்படி சொல்லி ஆறு பேருக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும்.

    ஆனால் இன்று காலை கால்நடைத்துறை ஆந்திர அமைச்சர் அப்பல் ராஜு 140க்கு மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளருடன் சென்று புரோட்டாக்கால் தரிசனம் மூலம் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

    இதையும் படிங்க: ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல்.. புதிய திட்டத்தை தொடங்கிய சத்தீஸ்கர் அரசு

    இது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. சாதாரண பக்தர்கள் முக்கிய பிரமுகர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்களை வாங்கி வரும்போது அந்த கடிதங்களில் ஆறு பேருக்கு மேல் ஒரே ஒருவருடைய பெயர் கூடுதலாக இருந்தால் கூட ஏற்க மறுக்கும் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு அமைச்சர் 140 பேரை ஒரே நேரத்தில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல எப்படி அனுமதி அளித்தார்கள் என்பது கேள்விக்குரிய விஷயமாக மாறி உள்ளது.ஆனால் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Tirumala, Tirupati, VIP Devotees

    அடுத்த செய்தி