• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • மேட்ரிமோனியில் காதல் வலை.. 11 இளம்பெண்களிடம் 3 கோடி வசூல் வேட்டை நடத்திய காதல் மன்னன்

மேட்ரிமோனியில் காதல் வலை.. 11 இளம்பெண்களிடம் 3 கோடி வசூல் வேட்டை நடத்திய காதல் மன்னன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆந்திராவில் மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளம்பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  திருமணம் செய்து கொள்வதாக கூறி பதினோரு பெண்களிடம் 3 கோடி ரூபாய் வசூல் செய்த காதல் மன்னன் கைது.

  மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளம்பெண்களிடம் மோசடி செய்து பண சம்பாதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்கள் போலி வெப்சைட்களை உருவாக்கியும் அல்லது ஏற்கனவே உள்ள மேட்ரிமோனி சைட்களை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்களை டார்க்கெட் செய்து இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். ஆந்திராவில் இளைஞர் ஒருவர் இளம்பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  Also Read: இது என்ன கொடுமை.. காதலியின் காதில் உடலுறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி

  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செட்டிகாலபூடி கிராமத்தை சேர்ந்தவர் புன்னட்டி சீனிவாஸ். இவர் கான்பூரில் எம்.டெக் பட்டப்படிப்பு படித்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த சீனிவாஸ் பணம் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழியை தேடினார் .அப்போது மேட்ரிமோனியல் சைட்ஸ், மற்றும் டேட்டிங் சைட்ஸ் ஆகியவற்றில் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து இருக்கும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் இளம் பெண்களை தேடிப்பிடித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர்களுடன் நண்பர் போல பழகி அதன்பின் காதல் வலையில் வீழ்த்தினார். இவரது காதல் வலையில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் சிக்கி லட்சங்களை இழந்துள்ளனர். இளம்பெண் ஒருவர் சைபர் க்ரைமில் கொடுத்த புகாரின் பேரில் இவரது உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  Also Read:  தடம் மாறிப்போன காதல் மனைவி.. திருப்பி அனுப்ப மறுத்த டீக்கடை மாஸ்டர் - ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்

  மேட்ரிமோனி தளத்தில் பெண் தேடுவது போல் தன் சுயவிவரங்களை அதில் பதிவு செய்வார்.  பெண்களுடன் பேசிப்பழக ஆரம்பித்தவுடன் அவர்களது மொபைல் எண்ணை வாங்கி காதல் வலையில் வீழ்த்திவிடுவார். நான் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தேன் கொரோனா காரணமாக தொழில் நஷ்டமடைந்து விட்டது. நீ உதவி செய்தால் மீண்டுவிடுவேன். திருமணத்துக்கு பின்பு எல்லாமே உனக்கு தானே  எனக் கூறி சிறுக சிறுக சில லட்சங்களை கறந்துவிட்டு அதன்பின் தனது போனை ஸ்விட்சு ஆப் செய்துவிட்டு மொபைல் எண்ணையும் மாற்றிவிடுவார்.

  புன்னட்டி சீனிவாஸ்


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவ்வாறு 11 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய சீனிவாஸ் தொழில் செய்வதற்கு பணம் தேவை. கொரோனா காரணமாக வியாபாரம் நஷ்டம் அடைந்து விட்டது என்பது போன்ற போலி காரணங்களை கூறி 11 பெண்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய்க்கு பணம் வசூல் செய்து விட்டார்.

  இதுதொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்க ராயப்பேட்டை, மதனப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சீனிவாஷ் மீது மேலும் ஆந்திராவில் உள்ள மேலும் பல காவல்நிலையங்கள் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: