காய்கறி வியாபாரியை நகராட்சித் தலைவராக்கிய ஜெகன்மோகன் ரெட்டி!

ஷேக் பாஷா

ஷேக் பாஷா கூறுகையில், என்னைப்போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை தந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு என நன்றிகள் என்றார்.

  • Share this:
பொதுமுடக்க காலத்தில் வருமானத்திற்காக காய்கறி வியாபாரம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி இளைஞரை நகராட்சித் தலைவர் ஆக்கி அழகுபார்த்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் சமீபத்தில் நகராட்சி/மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. முன்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் போலவே இந்த நகராட்சி தேர்தலிலும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முழுமையாக ஸ்வீப் செய்தது. மார்ச் 14ம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் உள்ள 86 நகராட்சிகளில் 84ஐ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

இதனிடையே ராயசோட்டி நகராட்சியின் தலைவராக ஷேக் பாஷா என்பவரை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நியமித்துள்ளார். ராயசோட்டி நகராட்சியின் தலைவராகியுள்ள ஷேக் பாஷா கடந்து வந்த பாதை பிறருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி தான் ஷேக் பாஷா. வேலையில்லாததால் பணம் சம்பாதிப்பதற்காக காய்கறி வியாபாரம் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே அவருக்கு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பை தந்துள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் திடீரென ராயசோட்டி நகராட்சியின் தலைவராக ஷேக் பாஷாவை தேர்ந்தெடுத்து ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷேக் பாஷா கூறுகையில், என்னைப்போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை தந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு என நன்றிகள். சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான சீட்களை தந்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. பின் தங்கிய வகுப்பினரை ஊக்குவிக்கும் வகையிலான முதல்வரின் நடவடிக்கைக்காக அவரை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை பொறுத்தவரையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 60.47% வாய்ப்பை தந்துள்ளது. அதே போல எஸ்.சி, எஸ்.டி, பி.சி மற்றும் சிறுபான்மையினர் போன்ற பின் தங்கிய வகுப்பினருக்கு 78% வாய்ப்பை வழங்கியுள்ளது.
Published by:Arun
First published: