• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் இழுத்தடிப்பு - மாவட்ட ஆட்சியர்கள் ஐந்து பேருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் இழுத்தடிப்பு - மாவட்ட ஆட்சியர்கள் ஐந்து பேருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

Judgement

Judgement

பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காத வழக்கில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆந்திரா நீதிமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

  • Share this:
    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரம்மா. நெல்லூர் மாவட்டம் டாலாபாகா கிராமத்தில் அவருக்கு சொந்தமான நிலத்தை ஆந்திர மாநில அரசு 2015-ம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால், அதற்கு உரிய இழப்பீடு அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. அதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் சாய் பிரம்மா வழக்குத் தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு 3 மாத காலத்தில் உரிய நிவாரண நிதியை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அந்தப் பெண்ணுக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படவில்லை. அதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் நிவாரணம் வழங்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அந்தப் பெண் தொடுத்தார்.

    அந்த வழக்கில் இன்று ஆந்திரா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நெல்லூர் மாவட்டத்தின் ஆட்சியராக பணிசெய்த ஐந்து ஆட்சியர்களுக்கும் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மன் மோகன் சிங்குக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.

    எஸ்.எஸ். ராவத் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 மாதம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது. சேஷகிரி ராவ், முத்தியால ராஜு, இந்தியாஸ் ஆகிய மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நெல்லூர் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: