Home /News /national /

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடத்தல் செம்மரக்கட்டைகளை ஏலம் விடும் ஆந்திர அரசு..

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடத்தல் செம்மரக்கட்டைகளை ஏலம் விடும் ஆந்திர அரசு..

செம்மர கட்டைகளை ஏலமிட ஆந்திரா அரசு முடிவு

செம்மர கட்டைகளை ஏலமிட ஆந்திரா அரசு முடிவு

2014 ஆவது ஆண்டு முதல் 2019 ஆவது ஆண்டு வரை இதே முறையில் 1251 டன் செம்மரக்கட்டைகளும் 2021 ஆம் ஆண்டு 318டன் செம்மரக்கட்டைகளும் ரூ.505 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த , பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளை விற்பனை செய்ய ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆந்திர மாநில அரசு கடும் பணம் நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட வகையில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதிலும் பெரும் சிரமத்தை ஆந்திர மாநில அரசு சந்தித்து வருகிறது.

    எனவே, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு உபரி வருமானத்திற்கான வழிவகைகளை ஆந்திர மாநில அரசு தேடி வந்தது. இந்த நிலையில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் 5700 டன் செம்மரக்கட்டைகளில் 2640 டன் செம்மரக்கட்டைகளை ஆன்லைன் மூலம் பகுதிவாரியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன.

    இதன் மூலம் சுமார் ரூ.3,000 கோடி கிடைக்கும் என்று ஆந்திர மாநில அரசு கருதுகிறது. இந்த தொகை மூலம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அரசுக்கு எவ்விதமான நிதி சுமை ஏற்படாது என்றும் தங்கு தடையின்றி அவற்றை செயல்படுத்தலாம் என்றும் ஆந்திரா அரசு கருதுகிறது.

    இதையும் படிங்க: விசில் அடித்ததும் இழுங்க.. பெண்கள் கயிறு இழுக்கும் போட்டியில் விழுந்து வாரிய கவுன்சிலர் - வைரல் வீடியோ

    மத்திய அரசுக்கு சொந்தமான எம்.எம்.டி.சி நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் செம்மரக்கட்டைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகள் எம் எம் டி சி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆவது ஆண்டு முதல் 2019 ஆவது ஆண்டு வரை இதே முறையில் 1251 டன் செம்மரக்கட்டைகளும் 2021 ஆம் ஆண்டு 318 டன் செம்மரக்கட்டைகளும் ரூ.505 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நடைபெறவுள்ள ஏலத்தில் சீனா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Smuggling

    அடுத்த செய்தி