Home /News /national /

Corona Medicine: பரபரப்பை ஏற்படுத்திய அதிசய மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி!

Corona Medicine: பரபரப்பை ஏற்படுத்திய அதிசய மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி!

அதிசய மூலிகை மருந்து

அதிசய மூலிகை மருந்து

ஆந்திர அரசின் அனுமதி கிடைத்தால் முழு வீச்சில் மருந்து தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று ஆயுர்வேத மருத்துவர் அனந்தய்யா தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆந்திராவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் இலவசமாக தயாரித்து வழங்கிய மூலிகை கண் சொட்டு மருந்து கொரோனாவை குணப்படுத்தியதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து குவிந்தது கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் தயாரித்த மருந்து, பரிசோதிக்கப்பட்டு அரசின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கிருஷ்ணாபட்டினம் கிராமம், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் போனிகி அனந்தய்யா. இவர் ஆயுர்வேத மருந்துகள், லேகியம் தயாரித்து உள்ளூர் அளவில் பிரபலமாக திகழ்ந்த நிலையில் சில மூலிகைகளை கொண்டு இவர் தயாரித்த மருந்து, கொரோனாவை உடனடியாக குணப்படுத்துகிறது என செய்திகள் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் குவிந்தனர்.

அனந்தய்யா தயாரித்த கண் சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். மேலும் மருத்துவர் அனந்தய்யா தயாரித்து வழங்கிய மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்தனர். அனந்தய்யாவின் மருந்தை போட்டுக்கொண்ட ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த தீவிர தொற்றாளர்கள் உடனடியாக குணமடைந்து பேசத்தொடங்கியதாகவும் தகவல்கள் உள்ளன.

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா பாதித்தவர்கள் அங்கு குவிந்ததனர், சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது, மேலும் கொரோனா பரவும் சூழலும் ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க காவல்துறையினர் வந்தனர்.

இந்த விவகாரம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சென்றதையடுத்து அனந்தய்ய தயாரித்துள்ள மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்ற உண்மையை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு ஐசிஎம்ஆர் குழுவினரை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை மருந்து விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே மருத்துவர் அனந்தய்யாவை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச்சென்று  அரசின் கட்டுப்பாட்டில் தங்கவைத்தனர்.

இந்நிலையில் அனந்தய்யாவின் மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசின் அனுமதி கிடைத்தால் முழு வீச்சில் மருந்து தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று ஆயுர்வேத மருத்துவர் அனந்தய்யா முன்னர் கூறிய நிலையில் தற்போது ஆந்திர அரசு அவருடைய மூலிகை மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கி உள்ளது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

ஆந்திர அரசு நடத்திய ஆய்வின் மூலம் அனந்தய்யாவின் மூலிகை மருந்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Andhra Pradesh, Corona, Covid-19

அடுத்த செய்தி