பந்தை எடுக்கச் சென்று மிகக் குறுகலான சந்துக்குள் சிக்கி போராடிய சிறுமி

குறுகிய சுவற்றின் இடையே சிக்கிய சிறுமி

விளையாட்டின் போது குறுகலாக சந்துக்குள் சிக்கிய சிறுமியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலம் ஓங்கோலில் உள்ள இந்திரம்மா காலனியை சேர்ந்த சிறுமி மீனாட்சி. நேற்று மாலை வீட்டுக்கு வெளியே மீனாட்சி,  விளையாடிக் கொண்டிருந்த போது பந்து இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள மிகவும் குறுகலான சந்துக்குள் விழுந்துவிட்டது.

  இதனை அடுத்து, பந்தை எடுப்பதற்காக அந்த குறுகலான சந்துக்குள் சென்ற மீனாட்சி இரு சுவர்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்டாள்.
  சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதி மக்கள் முயற்சித்தும் மீனாட்சியை மீட்க இயலவில்லை.

  சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமி மீனாட்சியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
  படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

  படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

  படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
  Published by:Sankar A
  First published: