• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சோகத்தில் முடிந்த சாகசம்: பதற வைக்கும் வீடியோ!

சோகத்தில் முடிந்த சாகசம்: பதற வைக்கும் வீடியோ!

தீ விபத்தின் காட்சி

தீ விபத்தின் காட்சி

ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் வாயில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வரவைக்கும் சாகத்தில் ஈடுபட்டனர். அதனை பார்த்து இளைஞர் ஒருவர் முயன்றபோது அவருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.

  • Share this:
    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மண்ணெண்ணெயை வாயில் ஊற்றி நெருப்பை ஊதும்  சாகச முயன்ற்சியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக நெருப்பு அவரது முகத்தில் பற்றியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யெலமஞ்சிலி நகரில் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள்  ண்ணெண்ணெயை வாயில் ஊற்றி நெருப்பை ஊதும் சாகசம் செய்வதைப் பார்த்து 30 வயதான சந்தோஷ் முதன்முறையாக தானும் சாகசம் செய்ய முயன்றார். கடந்த 10 ஆம் தேதி, நடை பெற்ற இந்த சம்பவத்தின் திடுக்கிடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து எலமஞ்சிலி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்ட ராவ் கூறுகையில், மண்ணெண்ணெயை வாயில் வைத்து கொண்டு நெருப்பை ஊதும் சாகசத்தை அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் திருவிழாக்களில் வழக்கமாக நடத்துவார்கள் . அப்போது மண்ணெண்ணையை வாயில் ஊற்றி எரியும் தீ மீது ஊதி சாகசம் செய்வார்கள் .

    கடந்த நவம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை யெலமஞ்சிலியில் நாகர் சதுர்த்து விழா நடைபெற்றது. அப்போது, ​​ஒரு சில கலைஞர்கள்  இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். தானும் அவர்களைப் போல் செய்ய முயன்ற சந்தோஷ் வாயில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு எரியும் நெருப்பு மீது அதனை ஊதினார்.


    அப்போது அவரது உடலில் மண்ணெண்ணெய் பட்டு உடல் முழுவதும் தீ பரவி காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் ’ என்றார்.

    இதையும் படிக்க: கர்நாடக அரசியலை உலுக்கும் பிட்காயின் மோசடி!


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: