குடிக்க தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்த மக்கள்... காலில் விழுந்து கோரிக்கை விடுத்த போலீஸ் டி.எஸ்.பி!

வாகனம் ஓட்ட தந்தை மறுத்ததை மகள் மீறியதால் இப்படி செய்துள்ளார்.

குடிக்க தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்த மக்கள்... காலில் விழுந்து கோரிக்கை விடுத்த போலீஸ் டி.எஸ்.பி!
News18
  • News18
  • Last Updated: January 4, 2020, 3:39 PM IST
  • Share this:
ஆந்திராவில் அமராவதியை தலைநகராக அறிவிக்கக் கோரி நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு போராட்டக்காரர்களின் கால்களைத் தொட்டு வணங்கி போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அண்மையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசுக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு செய்த விவசாயிகள், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு குடிக்க தண்ணீர் கூட அளிக்கக்கூடாது என கிராம மக்கள் தீர்மானித்தனர்.

சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. நிலைமை சிக்கலானதைத் தொடர்ந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டி காவல்துறை அதிகாரிகள் சீருடையிலேயே மக்களின் கால்களைத் தொட்டு வணங்கி போராட்டத்தை கைவிடக்கோரினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்