Home /News /national /

தன் உயிரைக் கொடுத்து இருவரின் உயிரை காப்பாற்றிய காவலர் - 18 மாத குழந்தையின் தந்தை வீரமரணம்!

தன் உயிரைக் கொடுத்து இருவரின் உயிரை காப்பாற்றிய காவலர் - 18 மாத குழந்தையின் தந்தை வீரமரணம்!

Andhra Cop K Srinivasulu

Andhra Cop K Srinivasulu

படகில் ஏற முற்பட்டபோது ஸ்ரீநிவாசவராவின் லைஃப் ஜாக்கெட் கழன்றது, காவலர் ஸ்ரீநிவாசவராவ் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டது.

வெள்ள நீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தை, மகனை காப்பாற்றிய காவலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்மாநிலங்கள் முழுவதும் பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக ஆந்திராவில் இரண்டு வார காலமாக பெய்வரும் மழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக ஆந்திர மாநில அரசு கூறியுள்ளது. காணாமல் போன மேலும் 18 பேரையும் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன.

Also read:  ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு - SBI கூறும் விளக்கம்

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் நெல்லூர் மாவட்டத்தின் தம்மரமடுகு எனும் பகுதியில் தந்தை, மகன் இருவர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஸ்ரீனிவாசராவ் (வயது 30) அங்கம் வகிக்கும் மாநில பேரிடர் மீட்பு குழு அங்கு விரைந்தது. அப்போது மின்கம்பத்தை பிடித்தவாறு தந்தை, மகன் இருவரும் உயிருக்கு போராடியதை பார்த்த மீட்புப் படையினர் உடனடியாக படகு மூலம் அப்பகுதிக்கு சென்று மின்கம்பத்தில் ஏறி நின்று கொண்டிருந்த இருவரையும் மீட்டு தங்கள் படகுக்கு கொண்டு வந்தனர்.



அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடியநேரத்தில் இருவரையும் படகில் ஏற்றிவிட்டு படகில் ஏற முற்பட்டபோது ஸ்ரீநிவாசவராவின் லைஃப் ஜாக்கெட் கழன்றது, இதில் நிலைகுழைந்து போன காவலர் ஸ்ரீநிவாசவராவ் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டது.

Also read:  காவல் நிலையத்தில் புகுந்து பாஜகவினர் தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸார் குற்றச்சாட்டு

தங்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு காவலர் ஸ்ரீநிவாசவராவ் உயிரிழந்ததை பார்த்த தந்தை, மகன் கதறி அழுதனர். மீட்புப் படையில் வீரமரணம் அடைந்த காவலர் ஸ்ரீநிவாசவராவுக்கு சுனிதா என்ற மனைவியும், 18 மாதங்களே ஆன மோக்‌ஷக்னா என்ற மகனும் உள்ளனர். இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த ஸ்ரீநிவாசவராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, பின்னர் அவரின் உடலுக்கு மாவட்ட எஸ்.பி அஞ்சலி செலுத்தினார். மீட்புப் பணியின் போது உயிர் போகும் தனது கடைசி நேரத்திலும் இரு உயிர்களை காப்பாற்றி வீரமரணம் அடைந்த காவலர் ஸ்ரீநிவாசவராவின் செயல் சக காவலர்களை உணர்ச்சிவசப்படுத்தியிருக்கிறது.

 

 
Published by:Arun
First published:

Tags: Andhra Pradesh, Flood

அடுத்த செய்தி