ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்ட மாணவி சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா. 20 வயதான இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் டிசம்பர் 7ஆம் தேதி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார். மாணவியின் இடுப்பு பகுதி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சிக்கியது.
இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். பின்னர் இரு மணி நேரம் போராடி, பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு புகார்.. துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் வேட்பாளர்!
ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா பரிதபாமாக உயிரிழந்துள்ளார். மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் அப்பகுதியினரை பெரும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, College student, Railway Station, Train Accident