Home /News /national /

தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகனின் புதிய அமைச்சரவையில் சாதி மற்றும் மத ரீதியான உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    2024ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தனது அமைச்சரவை முற்றிலும் மாற்றி அமைக்கிறார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.

    2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முற்றிலும் மாற்றி அமைக்கவுள்ளார்.

    முதலமைச்சர் ஜெகன் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 23 அமைச்சர்கள் உள்ள நிலையில், அதில் 19 பேரை நீக்கி புதியவர்களை சேர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதன்கிழமை மாலை ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசரனை ராஜ்பவனில் முதலமைச்சர் சந்தித்தார்.இதில் ராஜினாமா செய்த 19 அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் ஜெகன் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஜெகன் தனது ஆட்சியின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தலை கணக்கு வைத்து புதிய அமைச்சரவையை அமைக்கவுள்ளார் எனக் கூறபட்டுகிறது. இந்த அமைச்சரவை மாற்றம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டியிருந்தது. பின்னர் கோவிட் பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.

    இதையும் படிங்க - எழுவர் விடுதலை: ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தகவல்

    இந்நிலையில், கடந்த மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய ஜெகன், பதவி இழக்கும் அமைச்சர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என கவலைப்பட வேண்டாம். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த நடவடிக்கை என கூறியிருந்தார்.

    பதவி இழக்கும் அமைச்சர்களுக்கு மாவட்ட அளவில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெகனின் புதிய அமைச்சரவையில் சாதி மற்றும் மத ரீதியான உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    தற்போதைய அமைச்சரவையில் முன்னேறிய வகுப்பிலிருந்து 11 அமைச்சர்களும், ஓபிசி பிரிவிலிருந்து ஏழு அமைச்சர்களும், எஸ்சி பிரிவிருந்து 5 அமைச்சர்களும், எஸ்டி மற்றும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து தல ஒரு அமைச்சரும் உள்ளனர்.இதே கணக்கில்தான் புதிய அமைச்சரவை பிரதிநிதித்துவம் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    முன்னதாக ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்துவந்தது. அதை டபுளாக்கும் விதமாக புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கி, மாநிலத்தில் மொத்தம் மாவட்டங்கள் எண்ணிக்கை 26ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தின் வரைபடமே புதிய வடிவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Andhra Pradesh, JaganMohan Reddy

    அடுத்த செய்தி