Home /News /national /

என்.டி.ஆர், ஸ்ரீ பாலாஜி உட்பட 13 மாவட்டங்கள் புதிதாக உதயம்.. ஆந்திர அரசு அதிரடி

என்.டி.ஆர், ஸ்ரீ பாலாஜி உட்பட 13 மாவட்டங்கள் புதிதாக உதயம்.. ஆந்திர அரசு அதிரடி

ஆந்திரா மாவட்டங்கள் அதிகரிப்பு

ஆந்திரா மாவட்டங்கள் அதிகரிப்பு

ஆந்திராவில் புதிதாக பெயரிடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஸ்ரீபாலாஜி மாவட்டம் திருப்பதியை மாவட்ட தலைநகராகக்கொண்டும், என்டிஆர் மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் எண்டிஆரின்  சொந்த மாவட்டமான குண்டூர் மாவட்டத்தில் ஒரு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 லிருந்து 26 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி,  திருப்பதியை மாவட்ட தலைநகராக கொண்ட ஸ்ரீ பாலாஜி மாவட்டம் உதயமாகிறது.

    ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு தற்போது ஆந்திராவில் இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 ல் இருந்து 26 ஆக உயர்த்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் தற்போது ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், பிரகாசம்,அனந்தபுரம் ,கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் உள்ளன.

    நிர்வாக காரணங்களுக்காக ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தது.
    இந்தநிலையில் பதிமூன்று மாவட்டங்களையும் இருபத்தி ஆறு மாவட்டங்களாக மாற்றியமைக்க தேவையான அரசாணையை மாநில அரசு இன்று வெளியிட்டது.

    புதிதாக அமைய இருக்கும் மாவட்டங்களுக்கு மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாப்பள்ளி,காக்கிநாடா,கோனசீமா, ஏலூரு,என்டிஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தியாலா, ஸ்ரீசத்யசாய், அன்னமய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி என்று பெயரிடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..


    புதிதாக பெயரிடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஸ்ரீபாலாஜி மாவட்டம் திருப்பதியை மாவட்ட தலைநகராகக்கொண்டும், என்டிஆர் மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் எண்டிஆரின்  சொந்த மாவட்டமான குண்டூர் மாவட்டத்தில் ஒரு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி மரணத்தை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய தெலுங்கு தேசம் கட்சி அரசு கடப்பா மாவட்டத்தின் பெயரை ஓய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம் என்று மாற்றம் செய்து அறிவித்தது.

    மேலும் படிங்க: ‘நான் பாஜக தொண்டர்’ - பாஜகவிலிருந்து கட்சி தாவிய உ.பி அமைச்சரின் எம்.பி மகள்


    இந்த நிலையில் ஓய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சந்திரபாபு நாயுடுவின் மாமனாரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆன என்.டி. ராமராவ் பெயரில் புதிய மாவட்டம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Andhra Pradesh, Tirupathi

    அடுத்த செய்தி