அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பேருந்து விபத்து

விஜயநகர் மாவட்டம் சுங்கரிபேட்டா அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 • Share this:
  ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் சுங்கரிபெட்ட சாலையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தின் போது பின்னால் வந்த சமையல் கேஸ் சிலிண்டர் லாரி அரசுப் பேருந்து மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.  இந்த விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  பேருந்து ஒட்டுநர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயராலம் என்று கூறப்படுகிறது.

  இந்த விபத்து நடக்க முக்கிய காரணமாக அங்கிருந்த குப்பை கிடங்கில் இருந்து வந்த தீயின் புகைமூட்டமே என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். புகைமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருந்ததால் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: