Home /News /national /

திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து.. காதலனை கொல்ல முயற்சி: 2வது காதலனுடன் பெண் கைது

திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து.. காதலனை கொல்ல முயற்சி: 2வது காதலனுடன் பெண் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருமணம் முடிந்து மூன்றே மாதங்களில் விவாகரத்து பெற்ற ஆசிபா மீண்டும் தனது காதலனுடன் சேர்ந்து வாழ தொடங்கினார். இதனிடையே, ரகுமானுடன் ஆசிபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ஆசிபாவின் முதல் காதலனை கொல்ல திட்டமிட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆந்திர மாநிலம் திருப்பதியில் முதல் காதலனை கொல்ல முயற்சித்த பெண் மற்றும் அவரது 2வது காதலனை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரூ அரசு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை செய்து வந்தவர் ஆசிபா. அவருக்கும் அதே மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக வேலை செய்து வரும் நசீர் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

    இவர்களுடைய காதலை ஆசிபாவின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். எனவே ஆசிபாவுக்கு சலீம் என்பவருடன் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். எனினும் மூன்றே மாதத்தில் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் ஆசிபா தன்னுடைய காதலன் நசீருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர்களுக்கு ரகுமான் என்பவர் அறிமுகமானார். நாளடைவில் ரகுமானுக்கு ஆசிபாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டனர். ஆனால் அவருடைய காதல் வாழ்க்கைக்கு நசீர் இடையூறாக இருப்பார் என்று இரண்டு பேரும் கருதினர்.

    இதையும் படிங்க: ஒல்லியான உடல்வாகு: சிறை கம்பியின் இடையே புகுந்து தப்பிச்சென்ற இளைஞர்! - வீடியோ


    இந்தநிலையில் தான் ரகுமானை திருமணம் செய்து கொள்ள போவதாக  நசீர் இடம் ஆசிபா கூறியுள்ளார்.  மேலும் காதலித்த போது எடுத்து கொண்ட படங்கள் மற்றும் வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை டெலிட் செய்ய வேண்டுமென்று நசீரிடம் ஆசிபா கூறினார்.

    இதற்காக நசீரை ஓர் இடத்திற்கு வரவழைத்த ஆசிபா மற்றும் ரகுமான் ஆகியோர் அவருடைய செல்போனில் இருந்த படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை அளித்தனர்.ஆனாலும் தங்களுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு நசீர் இடையூறு ஏற்படுத்துவார் என்று கருதிய ஆசிபா,ரகுமான் ஆகியோர் நசீரை கொலை செய்ய திட்டம் போட்டனர்.

    மேலும் படிங்க: மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்


    நேற்று முன்தினம் நசீர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஆத்மகூரை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
    அப்போது அதே பாதையில் காருடன் காத்திருந்த ரகுமான் நசீர் மீது காரை மோத விட்டார். இந்த சம்பவத்தில் நசீர் படுகாயமடைந்தார்.
    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ரகுமானை பிடிக்க முயன்றனர். ரகுமான் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.

    இதையும் படிக்க: கைலாசாவில் பாலியல் வன்கொடுமை - நித்யானந்தா மீது இ-மெயிலில் புகார் அளித்த வெளிநாட்டு பெண்!


    நசீர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த ஆத்மகூரூ போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து நசீரிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது நசீர் தனக்கும் ஆசிபாவுக்கும் இடையே இருந்த காதல், அவருக்கு சலீம் என்பவருடன் நடைபெற்ற திருமணம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட விவாகரத்து, பின்னர் ரகுமானுக்கும் ஆசிபாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் ஆகிய அனைத்தையும் கூறினார். இதையடுத்து ரகுமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் ரகுமான், ஆசிபா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Andhra Pradesh, Illegal affair

    அடுத்த செய்தி