ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலும் நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்குப் பின் ஆர்.ஜி. பிளாஷ் (RG FLASH) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், 175 தொகுதிகளை கொண்ட ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 90 முதல் 110 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதேவேளையில் ஜெகன்மோகன் ரெட்டியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 65 முதல் 79 இடங்களை பிடிக்கும் எனவும், இதர கட்சிகள் 1 முதல் 5 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழக்ககூடும் என கூறியுள்ளது. இதுபோக மற்றவை ஒரு இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Also see...பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி மக்களின் வாழ்க்கை நிலை எப்படி?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.