தேசத்துரோக வழக்கில் ஆந்திரா எம்.பி. கைது: முதல்வருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரியதால் நடவடிக்கை

எம்.பி. கிருஷ்ணம் ராஜு.

ஆந்திராவில் நரசாபுரம் எம்.பி. கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு சிஐடி-யால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 • Share this:
  ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருந்து வருகிறது, இந்நிலையில் அவருக்கு இந்த வழக்கில் அளித்த ஜாமீனை ரத்து செய்ய  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் கோரிக்க வைத்தார் எம்.பி. கிருஷ்ணம் ராஜு.

  இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணம் ராஜு அரசுக்கு எதிராக சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். 59 வயதான கிருஷ்ணம் ராஜு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமை ஆட்சி மீது ஊழல் புகார்களை தொடர்ந்து அடுக்கி வந்தார்.

  இந்நிலையில் கிருஷ்ணம் ராஜு மீது அரசுக்கு எதிரான துரோகம் பிரிவு 124ஏ, சமூகத்தில் சில பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் பிரிவு 153 ஏ, மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

  கைதுக்குப் பிறகு போலீஸார் கூறும்போது, “எம்.பி. ராஜு இருபிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக வெறுப்புப் பேச்சை பேசி வருவதாகவும் அரசுக்கு எதிராக கலத்தை தூண்டி விடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

  தனது வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் மூலம் எப்போதும் பதற்றத்தை உருவாக்குகிறார். அரசு முக்கியஸ்தர்களை நோக்கி அவர் வைக்கும் தாக்குதல்கள் அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது” என்றார்.

  2012-ல் ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடப்பட்டுள்ளது. இதில் ஜெகன் மோகனுக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இதனையடுத்து முதல்வர் ஜாமீன் விதிமுறைகளை மீறுவதாக எம்.பி. கிருஷ்ணம் ராஜு குற்றம்சாட்டி ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பரபரப்பு கோரிக்கை வைத்தார்.

  கிருஷ்ணம் ராஜு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். ஆனால் மீண்டும் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னால் கட்சியில் இணைந்தார், இடையில் பாஜக மற்றும் தெலுங்கு தேசத்தில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: