ஆந்திராவில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆளும் கட்சிப் பிரமுகரின் மகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக ஏற்கனவே முதல் மதிப்பெண் எடுத்து வந்த மாணவிக்கு டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில் பிரம்மரிஷி என்ற பெயரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது அந்த பள்ளியில் பள்ளியில் மாணவி மிஸ்பா என்பவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். மிஸ்பா படிப்பில் முதல் மாணவியாக இருந்தார்.
இதையும் படிங்க - சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை.. அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய ஆலோசனை!
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் என்பவர் மகள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளியில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்த தலைமை ஆசிரியர் ரமேஷ் மாணவி மிஸ்பாவுக்கு டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
இதனால், மனமுடைந்த மிஸ்பா, உருக்கமான கடிதம் எழுதி வைத்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என கூறி மிஸ்பாவின் பெற்றோர்கள், உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். மிஸ்பா தனது தந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதத்தில், அப்பா மன்னிக்கவும். என்னால் உங்களுக்கு பல பிரச்னைகள்.
இதையும் படிங்க - கொல்கத்தாவில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்... உயர் நீதிமன்றம் உத்தரவு
எனது நெருங்கிய தோழியே எனது மரணத்திற்கு காரணம். அனைத்திற்கும் நீ தான் காரணம் என அந்த மாணவியை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்...
என்னை மன்னிக்கவும் அப்பா. உன்னை விட்டு போக முடியாது. ஆனால், இன்று உன்னை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் சக மாணவி தான். இப்படிக்கு உங்கள் மகள் மிஸ்பா. விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார். மாணவி மிஸ்பா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகள் பூஜிதா முதல் மதிப்பெண் இடத்திற்கு வரவேண்டும் என்ற காரணத்தால் மிஸ்பாவுக்கு தலைமை ஆசிரியர் டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.