Home /News /national /

ரஷ்யா - உக்ரைன் மோதல்: மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்க தீவிரம் காட்டும் ஆனந்த் மஹிந்திரா

ரஷ்யா - உக்ரைன் மோதல்: மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்க தீவிரம் காட்டும் ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ரஷ்யா - உக்ரைன் போரால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு ஆனந்த் மஹிந்திரா ஆர்வம் காட்டியுள்ளார்.

    ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே நடைபெற்று வரும் மோதல்கள் இந்தியாவில் மருத்துவ சேர்க்கையின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த சூழல் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக உக்ரைன் இருப்பதை கோடிட்டு காட்டி இருக்கிறது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கச் செல்லும் நாடுகளில் உக்ரைன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி உக்ரைன் நாட்டில் சுமார் 18,000 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். தவிர உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த நவீன், நீட் காரணமாக இங்கே மருத்துவம் படிக்க முடியாமல் போனதாக எழுந்துள்ள குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்தியாவில் மருத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். மஹிந்திரா குழுமம் சார்பாக ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் (Mahindra University) ஒரு மருத்துவப் படிப்பு நிறுவனத்தை திறப்பது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசீலித்து வருகிறார். தனது சமீபத்திய ட்விட்டில் ஆனந்த் மஹிந்திரா கூறி இருப்பதாவது "இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வளவு பற்றாக்குறை இருப்பதாக எனக்கு தெரியாது" என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனது சக ஊழியரும், டெக் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரியுமான சிபி குர்னானியை டேக் செய்து மஹிந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மருத்துவ நிறுவனத்தை அமைப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆராய முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

    ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட் வெளி நாடுகளில் உள்ள இந்திய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட கிராஃபிக்ஸுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கிறது. சி.பி.குர்னானியை மஹிந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவப் படிப்பு நிறுவனத்தை நிறுவுவதற்கான யோசனையை ஆராயுமாறு ஆனந்த் மஹிந்திரா கேட்டு கொண்டுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல யூஸர்கள் ஆனந்த் மஹிந்திராவின் யோசனையைப் பாராட்டியுள்ள அதே நேரத்தில் இந்த விவகாரம் முன்னேற்றம் பெற்று மருத்துவப் படிப்பு நிறுவனம் அமைக்கப்பட்டால் கட்டணத்தை அனைவரும் செலுத்தும் வகையில் குறைவாக வசூலிக்கவும் கேட்டு கொண்டனர்.

    ஏனென்றால் மாணவர்கள் இருக்கை பற்றாக்குறையால் மட்டுமல்ல, பெரும் செலவினத்தால் கூட வெளிநாடுகளுக்கு படிக்க செல்கின்றனர். அதாவது மெடிக்கல் சீட் பற்றாக்குறை மற்றும் அதிக கட்டணம் போன்ற இரட்டை சவால்களை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்வதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.


    இதனிடையே ஆனந்த் மஹிந்திராவின் யோசனைக்கு உற்சாகமாக பதிலளித்த பல யூஸர்கள் உங்கள் நிறுவனம் மற்ற கல்லூரிகளைப் போல "கோடிகளில்" கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று பரிந்துரைத்தனர். இந்த பரிந்துரையை கட்டாயம் பரிசீலிப்பதாக மஹிந்திரா குரூப் கூறி இருக்கிறது. ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் மஹிந்திரா பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல், சட்டம் மற்றும் மேலாண்மை, ஊடகம் மற்றும் லிபரல் ஆர்ட்ஸ்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது.

    உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் மாணவர்களின் மருத்துவ படிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பெருமளவில் வெளியேற்றுவதற்கு வழிவகுத்த ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து பிரதமர் கடந்த வாரம் நாட்டில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த தனியார் துறைக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு வெளிப்படையாக பதிலளித்த முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆவார். முன்னேற துடிக்கும் பலருக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளை வழங்கி உள்ள ஆனந்த் மஹிந்திரா, மருத்துவ படிப்பு நிறுவனத்தை விரைவில் அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Anand Mahindra

    அடுத்த செய்தி