• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 76 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மஹிந்திரா’ நிறுவனம் - நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா!

76 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மஹிந்திரா’ நிறுவனம் - நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

சமீபத்தில் தான் மஹிந்திரா தன்னுடைய பிராண்ட் இமேஜ் மற்றும் லோகோவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
இந்தியாவில் தலைசிறந்த ஆட்டோ பிராண்டான ‘மஹிந்திரா’ நிறுவனம் 76 ஆண்டுகளை நிறைவு செய்ததால் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

‘மஹிந்திரா அண்ட் மஹிந்திரா’ நிறுவனம் இந்தியாவில் பழமையான வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் மிகவும் உறுதியான சர்வதேச அடித்தளத்தைக் கொண் பல துறைகளில் முன்னணி வகிக்கிறது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தொடங்கப்பட்டு இன்றோடு 76 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து ‘மஹிந்திரா அண்ட் மஹிந்திரா’ நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ‘நமது நிறுவனம் 76 வருட செயல்பாட்டை நிறைவு செய்துள்ளது, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் 1945ல் தொடங்கி இப்போது உலகின் மிக முக்கியமான வாகன உற்பத்தியாளராக இருக்கிறது. நம் இந்தியாவில் தற்போதுள்ள பழமையான நிறுவனங்களில் நம் நிறுவனமும் ஒன்று.  அக்டோபர் 2, 1945 அன்று ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கியது. அப்பொழுதுதான் நம்முடைய ‘மஹிந்திரா குழு’ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் நாங்கள் எங்கள் நிறுவனம் திறப்பை கொண்டாடியது ஒரு தற்செயலான நிகழ்வு. அன்று லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் என்பது கூட தற்செயல் நிகழ்வுதான்.

இன்று எங்கள் 250,000 வலுவான ஊழியர்களின் குடும்பத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை வளர்த்த இந்த நாட்டிற்கும், எங்களை வரவேற்ற முழு உலகிற்கும், எங்களை உற்சாகப்படுத்திய உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றி. வடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து கொடுக்க இச்சமயத்தில் உறுதி ஏற்கிறோம். அதற்காகவே நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம்’ என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 



உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது மஹிந்திரா நிறுவனம். இந்தியாவில் விவசாய இயந்திரங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. இவர்கள் வேளாண் வணிகம், தொழில்துறையை, நிதி மற்றும் காப்பீடு,பண்ணை உபகரணம், தளவாடங்கள், பயணியர் வாகனங்கள், விண்வெளி, கார் மற்றும் இருசக்கர வானகனங்கள் உற்பத்தியிலும் உலக அளவில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

ALSO READ |  இதனை பார்த்தீர்களா பிரதமரே? விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காட்டி கேள்வி எழுப்பிய பிரியங்கா...

பொலேரோ, ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட பல பயணிகள் வாகனங்களுடன் மஹிந்திரா தற்போது நாட்டின் முன்னணி வாகன நிறுவனமாக டாப் லிஸ்டில் உள்ளது. இதனிடையே விரைவில் வெளியாக இருக்கும் மஹிந்திராவின் ‘எக்ஸ்யூவி 700’ குறித்து வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் கார் மாடலில் இதுவும் ஒன்று.

சுதந்திர காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல இடையூறுகளை சமாளித்து ‘மஹிந்திரா’ நிறுவனம் இப்பொழுதும் உலகில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கி வருகிறது. சமீபத்தில் தான் மஹிந்திரா தன்னுடைய பிராண்ட் இமேஜ் மற்றும் லோகோவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: