மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய போது பால்கரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பயணித்த சொகுசு கார் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் நம்பிக்கையூட்டும் முன்னணி தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரியின் மரணம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காரில் சீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. முன் பக்கம் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையில், அவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற தொடர் வலியுறுத்தலுக்கு பிறகும் இந்தியாவின் மதிப்பு மிக்க நபரே இதை செய்யாதது துரதிஷ்டவசமானது என பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னணி தொழிலதிபரும் மகேந்திர குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா சைரஸ் மிஸ்திரி மரணத்தை எச்சரிக்கையாக கொண்டு ஒரு உறுதி மொழி எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது, "நான் இனி எப்போதும் காரில் பின்பக்கம் அமர்ந்திருந்தால் கூட எனது சீட் பெல்டை நிச்சயம் அணிந்து கொள்வேன். நீங்களும் கட்டாயம் இந்த உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது குடும்பத்தினருக்கு செய்யவேண்டிய கடமை இது" என்றுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்
2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. சைரஸ் மிஸ்திரி இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்தார். கட்டுமான நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து 2012 இல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா குடும்பத்தில் இருந்து வராத முதல் தலைவர் இவர் தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anand Mahindra, Road accident, Road Safety