Home /News /national /

தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு மஹிந்திரா ட்ராக்டரில் வந்த பிரேசில் பெண்.. வீடியோவை ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா!

தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு மஹிந்திரா ட்ராக்டரில் வந்த பிரேசில் பெண்.. வீடியோவை ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா!

பார்ட்டிக்கு ட்ராக்டரில் வந்த பிரேசில் பெண்

பார்ட்டிக்கு ட்ராக்டரில் வந்த பிரேசில் பெண்

15 வயது பிரேசிலியப் பெண் தனது 15வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மஹிந்திரா டிராக்டரை ஓட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சமூக ஊடக தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தொழில் அதிபர்களின் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். மேலும், சமூக ஊடக பக்கங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களை மகிழ்விக்கும் வகையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இந்த முறை வெளிநாட்டில் இருக்கும் தனது விநியோகஸ்தர் ஒருவரின் மகள் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு மஹிந்திரா ட்ராக்டரில் வரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பிரேசிலிய விநியோகஸ்தர் ஒருவரின் மகளான 15 வயது பிரேசிலியப் பெண் தனது 15வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மஹிந்திரா டிராக்டரை ஓட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளதாவது, சிறுமி டிராக்டர்களை மிகவும் விரும்புவார். மேலும் அவரது பிறந்தநாளுக்கு ஏதாவது விசேஷமாக செய்ய விரும்பியுள்ளார் அவரது தந்தை. எனவே எங்களது விநியோகஸ்தர் கொண்டாட்டத்திற்காக சிறிய டிராக்டரைக் தனது மகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டுடன் இணைக்கப்பட்ட வீடியோவில், மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பிறந்த நாள் பார்ட்டியில், விருந்தினர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க 15 வயது சிறுமி, தனது தந்தை வழங்கிய டிராக்டரை ஒட்டி வருகிறார். இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

 



 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் தடம் பதித்த இந்திய பிராண்ட் குறித்து பெருமைப்படுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மஹிந்திராவை சர்வதேச பிராண்டாக மாற்றியதற்காக திரு ஆனந்த் மஹிந்திரா உங்களை நினைத்து பெருமை கொள்வதாக பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். "டிராக்டர் இருக்கிறதோ இல்லை டிராக்டர் இல்லையோ, அந்த நுழைவு அவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும்" என்று ஒரு ட்விட்டர் யூசர் கூறியுள்ளார். பிறந்தநாள் பெண்ணின் என்ட்ரியை பார்த்து பல யூசர்கள் ஆச்சரியப்பட்டனர்.

ஆனந்த் மஹிந்திரா தனது வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் உத்வேகம் தரும் கதைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவரைப் பின்தொடர்பவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார். சில காலத்திற்கு முன்பு, அவர் தனது 17 வயதில் தனது இளமைப் பருவத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் தனது நண்பர் ஒருவருடன் பம்பாயிலிருந்து பூனாவுக்கு ஹிட்ச்ஹைக்கிங் செய்துள்ளார். திறந்த சாலைகள் மீது அவருக்கு அன்பும் அபிமானமும் ஏற்பட்ட காலம் அது என்று பகிர்ந்திருந்தார்.

 



 

அவரது இந்த பதிவு வழக்கம் போல் பல லைக்குகள், கமெண்ட்டுகள் மற்றும் ரீட்வீட்களை பெற்று வைரலானது. பலர் மகிந்தராவை பார்த்து வியந்ததாக கூறியுள்ளனர். இது போன்று அவர் பல வேடிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான பதிவுகளை பகிர்ந்து வருவது வழக்கம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Anand Mahindra

அடுத்த செய்தி