ஹோம் /நியூஸ் /இந்தியா /

சோழர்களின் பெருமையை நாம் முழுமையாக உணரவில்லை.. பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா

சோழர்களின் பெருமையை நாம் முழுமையாக உணரவில்லை.. பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

தொழில்நுட்ப வளர்ச்சி அல்லாத அந்த காலத்தில் சோழர்கள் செய்த மகத்தான சாதனையை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  நாட்டின் முன்னணி நிறுவனமான மஹிந்திர நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தனித்துவமான விஷயங்கள், சாதனை செயல்கள், அறிவுசார் தகவல்களை சமூக வலைத்தளங்களில் உலாவினால் அதை கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாமல் பதிவு செய்து வருகிறார் இவர்.

  தற்போது பொன்னியின் செல்வன் பீவர் தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்றியுள்ள நிலையில், சோழர் காலம் அவர்களின் நாகரீகம் குறித்து பலரும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் தகவல்களை தேடி பார்க்கின்றனர். சோழர்கள், குறிப்பாக ராஜராஜ சோழன் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோயில் தான்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பெருவுடையார் கோயில் குறித்து முன்னணி டிசைனாரன ஸ்ரவன்யா ராவ் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  தஞ்சை பெரிய கோயிலுக்கு பயணம் சென்று அவர் கோயிலின் கட்டுமான சிறப்புகளை ஆங்கிலத்தில் எடுத்துரைத்து 90 நொடி காணொலியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த கோயிலில் பிரமீடுகளுகளை கட்ட கொண்டுவரப்பட்ட கற்களை விட அதிக கற்களை கொண்டுவந்துள்ளனர். இந்த கோயில் பரப்பளவில் 200 தாஜ்மகாலை வைத்துக்கொள்ள முடியும். உச்ச விமான கல்லின் எடையானது 80 டன் என பல தகவல்களை ஸ்ரவன்யா ராவ் கோயிலின் அழகை பிரம்மாண்டத்தை காட்டும் காட்சிகளுடன் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ளார்.

  இந்த வீடியோ அனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "ஸ்ரவன்யா ராவ் தகவல்கள் செறிந்த ஊக்கமூட்டும் வீடியோவை தயாரித்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி அல்லாத அந்த காலத்தில் சோழர்கள் செய்த மகத்தான சாதனையை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை. இதன் வரலாற்று சிறப்பை நாம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.

  இதையும் படிங்க: 2023-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பதே இலக்கு - சச்சின் பைலட்

  பெரிய கோயில் குறித்த ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டை சுமார் 8.3 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 43 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்தி, தெலுகு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள இந்த வேளையில் தஞ்சாவூர், பெரிய கோயில் குறித்த கவனம் நாட்டின் பல பகுதிகளில் பரவியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Anand Mahindra, Tanjore temple, Viral Video