ANAND MAHINDRA SHARES INTRIGUING WILDLIFE CLIP OF ELEPHANT AND TIGER INVOKES WILLIAM BLAKES POEM VAI GHTA
வனத்தில் யானை-யை ரசித்துப்பார்த்த புலி- ட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா (வீடியோ)
ட்விட்டரில் கூர்க் வனப்பகுதியில் யானை ஒன்று வாலாட்டிக் கொண்டிருந்ததை, அதன் பின்னால் புதரில் இருந்தமறைந்திருந்த புலி ரசித்து பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் கூர்க் வனப்பகுதியில் யானை ஒன்று வாலாட்டிக் கொண்டிருந்ததை, அதன் பின்னால் புதரில் இருந்தமறைந்திருந்த புலி ரசித்து பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா, தன்னை ஈர்க்கும் வீடியோக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். தற்போது, கூர்க் பகுதியில் வசித்து வரும் அவரது தங்கை அனுப்பிய வீடியோ ஒன்றை தன்னுடயை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கூர்க் வனப்பகுதியில் புதர் ஒன்றின் அருகே நிற்கும் யானை ஒன்று தன்னை மறந்து வாலாட்டிக் கொண்டிருக்கிறது. அப்போது, அந்த புதருக்குள் இருந்த புலி ஒன்று திடீரென வெளியே வந்து யானை வாலாட்டிக்கொண்டிருப்பதை உற்று பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவுக்கு பிரபல ஆங்கில கவிஞர் எழுதிய" Tyger Tyger, burning bright, ...." என்ற கவிதையை கேப்சனாக பதிவிட்டுள்ளார்.
“Tyger Tyger, burning bright,
.....
In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?”
William Blake’s famous poem comes alive in this amazing clip. (Shared by my sister who has a home in Coorg.The person who sent it to her said it’s from the Nagarhole reserve) pic.twitter.com/zavAMlcmif
நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த வீடியோ இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதுபோன்ற வித்தியாசமான காணொளிகளை பகிர்ந்து வரும் ஆனந்த் மகிந்திராவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
“Tyger Tyger, burning bright,
.....
In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?”
William Blake’s famous poem comes alive in this amazing clip. (Shared by my sister who has a home in Coorg.The person who sent it to her said it’s from the Nagarhole reserve) pic.twitter.com/zavAMlcmif
இதேபோல், டிசம்பர் 15ம் தேதி ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த கிறிஸ்துமஸ் விளம்பர வீடியோவும் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், பெல் ஒன்றை எடுத்து முதியவர் ஒருவர் நாள்தோறும் பயிற்சி எடுக்கிறார். எதற்காக, இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பெல்லை தூக்க முதியவர் முயற்சி செய்கிறார் என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் தன்னுடைய பயிற்சியை அந்த முதியவர் மேற்கொள்கிறார்.
பின்னர், தன் மகள் வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் அவர், பேத்திக்கு பரிசு ஒன்றை அளிக்கிறார். பேத்தி கிஃப்டை பிரித்து பார்க்கும்போது அதில் கிறிஸ்துமஸ் ஸ்டார் இருக்கிறது. பின்னர், பேத்தியை தூக்கிக்கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அருகில் அவர் செல்லும்போது, பேத்தி மகிழ்ச்சியுடன் அந்த ஸ்டாரை கிறிஸ்துமஸ் மரத்தில் வைக்கிறாள். அந்த நொடியில், பேத்தியை தூக்குவதற்காக இவ்வளவு நாட்கள் அவர் கடினமாக முயற்சி எடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்து மனநெகிழ்வுடன் கண்ணீர் வடிக்கின்றனர்.
Shoot; you made me cry so early in the day. No granddaughter yet but my grandson’s that age... https://t.co/YhRG7eGfph
இந்த வீடியோவை கண்டவுடன், தான் அழுதுவிட்டதாக தெரிவித்த ஆனந்த் மகிந்திரா, தனக்கு பேத்தி இல்லை, ஆனால் அந்த சிறுமி வயதுடைய பேரன் இருக்கிறார் என நெகிழ்வுடன் கூறியிருந்தார். ஆனந்த் மகிந்திராவின் நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன் அந்த விளம்பர வீடியோவும் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்றது. அதேபோல், தற்போது அவர் பகிர்ந்துள்ள யானை - புலி வீடியோவையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.