தமிழ்நாட்டில் உள்ள சாலை அமைப்பை பற்றி பாராட்டி ட்வீட் செய்த ஆனந்த் மகேந்திரா!
தமிழ்நாட்டில் உள்ள சாலை அமைப்பை பற்றி பாராட்டி ட்வீட் செய்த ஆனந்த் மகேந்திரா!
தமிழ்நாட்டில் உள்ள சாலை
நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம் என்கிற அரசியல் நிபுணர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல மாநிலங்களை சுற்றி பார்த்த இவர், தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளார். எரிக்கிற்கு தமிழ்நாட்டை சுற்றி பார்த்த போது ஏற்பட்ட ஒரு சிறந்த அனுபவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பல்வேறு வளங்கள், எண்ணில் அடங்காத அழகியல் காட்சிகள் நிறைந்த இடங்கள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன. இதன் மகத்துவத்தை அறிந்து, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களின் பலர் தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற சிற்ப கலைகள், கோவில்கள், பாரம்பரியம், கலாச்சரம் ஆகியவற்றை போற்றி கூறுவதுண்டு. இது ஒரு புறம் இருக்க, சில வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் உள்ள சாலை அமைப்புகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை பற்றி பாராட்டி கூறுவதுண்டு.
அந்த வகையில், நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம் என்கிற அரசியல் நிபுணர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல மாநிலங்களை சுற்றி பார்த்த இவர், தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளார். எரிக்கிற்கு தமிழ்நாட்டை சுற்றி பார்த்த போது ஏற்பட்ட ஒரு சிறந்த அனுபவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலைக்கு சென்றுள்ளார். அந்த மலையின் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளையும், அங்கு போடப்பட்டு இருக்கும் சாலை அமைப்புகளையும் கண்டு இவர் பிரமித்துள்ளார்.
சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகள் அந்த மலையில் இருந்துள்ளன. இதை பற்றி, "நம்பமுடியாத இந்தியா! . தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலைச் சாலை பகுதியில் 70 தொடர்ச்சியான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தியாவின் மிகவும் தைரியமான மலைச் சாலைகளில் இதுவும் ஒன்று." என்பதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் இதன் அழகிய புகைப்படத்தையும் அவரின் பதிவுடன் சேர்த்துள்ளார். இந்த ட்வீட்டை ஆனந்த் மகேந்திரா அவர்கள் எதர்ச்சையாக பார்த்துள்ளார்.
உடனே இந்த பதிவிற்கு ரீ-ட்வீட் செய்துள்ளார். அதில் "எரிக், எனது சொந்த நாட்டைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை நீங்கள் எனக்கு உணர வைத்துள்ளீர்கள்! இது மிகவும் தனித்துவமானது. இந்த சாலையை யார் கட்டினார்கள் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன், அதன் பிறகு என்னை அங்கு கொண்டு செல்ல என் தார் வாகனத்தை மட்டுமே நம்புவேன்! என்று தெரிவித்துள்ளார்.
Erik you keep showing me how little I know about my own country! This is just phenomenal. I want to find out who built this road and then I will only trust my Thar to take me on it! https://t.co/eD1IFsgcn6
ஜனவரி 9 ஆம் தேதி வெளியான இந்த ட்வீட்டை சுமார் 12000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இதை குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், "இதில் எனது தார் (2015 மாடல்) வாகனத்தை ஓட்டினேன். இதற்காகவே அது பிறந்தது போல் சிறப்பாக செயல்படுகிறது.
மலையில் ஏறுவதற்கு சிரமமின்றி இருந்தது. நான் கல்ஹட்டி காட் பகுதியில் ஏறி ஊட்டிக்கு சென்றேன், அது மிகவும் செங்குத்தானது. மீண்டும், எனது தார் வாகனம் வளைவுகளையும் ஏறுதலையும் விரும்புகிறது." என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இன்னொரு நபர், "2013 ஆம் ஆண்டு இங்கு நான் சென்றுள்ளேன்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் பலர், "உண்மையில் இது இன்கிரிடிப்பில் இந்தியா தான்" என்று ட்வீட் செய்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.