போட்டோகிராபி யாருக்கு தான் பிடிக்காது. நமக்கு ஒருவரை சரியான முறையில் போட்டோ எடுக்க தெரியாமல் இருந்தாலும் நம்மால் முடிந்த வரை அவரை அழகாக காட்டி விட வேண்டும் என்று பல ஆங்கிள்களில் வைத்து அவரை போட்டோ எடுப்போம். அவற்றில் பல சொதப்பினாலும் சில நல்ல போட்டோக்களும் நமக்கு கிடைத்துவிடும். சாதாரணமாக போட்டோ எடுப்பவர்களே இப்படி இருக்கிறார்கள் என்றால் போட்டோகிராபி மீது அதீத காதல் உள்ளவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
அந்த வகையில் நாம் எடுத்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வது வழக்கம். நாம் எதர்ச்சையாக பகிரும் சில போட்டோக்கள் வைரலாகவும் வாய்ப்புண்டு. இது போன்று மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட 2 போட்டோக்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இவர் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் தனது ட்விட்டரில் பகிர்வதில்லை. பல்வேறு வகையான தகவல்களை எப்போதும் பகிர்ந்து வருவார். அழகியல் போட்டோக்கள், வேடிக்கையான பதிவுகள், ஊக்கமூட்டும் பதிவுகள், இந்தியாவின் சிறப்புகள் போன்ற பலவற்றை பற்றி அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள கொச்சியில் எடுத்து 2 புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்தார். இதை பார்த்த எல்லோரும் மிகவும் பிடித்து விட்டது. அந்த அளவிற்கு இயற்கை எழில் இந்த 2 புகைப்படங்களிலும் உள்ளது. இவர் ட்விட்டரில் பதிவிடும் போது சிறப்பான கேப்ஷன் ஒன்றை குறிப்பிட்டு போட்டுள்ளார். "கடவுளின் சொந்த நாடு? ஆம் உண்மையாக அப்படித்தான் உள்ளது. எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல்." என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை டிசம்பர் 2 ஆம் தேதி அன்று பதிவிட்டுள்ளார். இவர் எடுத்த 2 புகைப்படமும் அந்திமாலை பொழுதில் எடுத்தது போன்றுள்ளது. கடலில் இயற்கை அழகை பற்றி சொல்லவா வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான லைட்டிங் கொண்டு ஆனந்த் மகேந்திரா இந்த 2 போட்டோவையும் எடுத்துள்ளார். இந்த பதிவிற்கு பலர் ரீட்வீட் செய்துள்ளனர். அத்துடன் பலர் இதை பகிர்ந்தும் வருகின்றனர். இதற்கு 4000-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த போட்டோவுடன் இவர் போட்டிருந்த கேப்ஷன் பலருக்கும் பிடித்திருந்தது. அதை பற்றி நிறைய பேர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
God’s own country? Yes indeed. Without exaggeration. #Kochi pic.twitter.com/E5UUsgFYcM
— anand mahindra (@anandmahindra) December 2, 2021
அதில் ஒருவர், "நான் கேரளாவை சேர்ந்தவன் இல்லை. ஆனால் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்களின் இந்த போட்டோ தான் எனக்கு நினைவுக்கு வரும் . இந்த இடமும் மக்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்று ஆனந்தம் பொங்க கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், "ஆம்! உண்மையில் இது கடவும் தேசம் தான்" என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒருவர், "சந்தேகமே இல்லை, இது மிகவும் அழகாக உள்ளது. நமது குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கு ஏற்ற கடவும் தேசம் இது" என்று சுட்டி காட்டியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anand Mahindra