Anand Mahindra : தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில், ஆனந்த் மஹிந்திரா தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவது குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாட்டின் முக்கிய மற்றும் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு போஸ்ட்களுக்காக ட்விட்டரில் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமின்றி பல தடைகளை எதிர்கொண்டாலும் சில நம்பமுடியாத விஷயங்களை செய்து தன் கவனத்தை ஈர்க்கும் நபர்களைப் பற்றிய பதிவுகள் உட்பட பல்வேறு ரசனை மிகுந்த போஸ்ட்கள்களை அவர் அடிக்கடி ஷேர் செய்து நெட்டிசன்களை கவருவது வழக்கம். மேலும் ஆக்கபூர்வமான விஷயங்களை செய்து நபர்களை உற்சாகப்படுத்தி தன்னால் இயன்ற உதவிகளை அடிக்கடி செய்யும் பண்பை உடையவர் ஆனந்த் மஹிந்திரா. இதனால் நெட்டிசன்களின் இதயங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனிடையே கடந்த டிசம்பரில் டெல்லியில் இருக்கும் 2 கைகள் மற்றும் கால்கள் இல்லாத மாற்று திறனாளி ஒருவரைப் பற்றிய தனது 'வியப்பான' பதிவின் மூலம் ட்விட்டர்வாசிகளை ஆனந்த் மஹிந்திரா கவர்ந்தார். அந்த மனிதனின் போராட்ட குணத்தை கண்டு அவர் மிகவும் வியப்படைந்தார். ஏனென்றால் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் முழுமையாக இல்லாத நிலையிலும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை லாவகமாக ஓட்டி தன்னுடைய சொந்த உழைப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யமூட்டினார் பிர்ஜு ராம் என்ற அந்த மாற்று திறனாளி.
இந்த வீடியோவை கடந்த மாதம் ட்விட்டரில் ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா இன்று எனது டைம்லைனில் இது கிடைத்தது. இது எவ்வளவு பழமையானது, எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, ஆனால் இந்த மனிதரைப் பார்த்து நான் வியப்படைகிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவருக்கு உதவி செய்யவும் முடிவு செய்தார். அவரை தனது நிறுவனத்தின் லாஸ்ட் மைல் டெலிவரிக்கு பிசினஸ் அசோசியேட் ஆக்க போவதாக குறிப்பிட்டிருந்தார்.
Received this on my timeline today. Don’t know how old it is or where it’s from, but I’m awestruck by this gentleman who’s not just faced his disabilities but is GRATEFUL for what he has. Ram, can @Mahindralog_MLL make him a Business Associate for last mile delivery? pic.twitter.com/w3d63wEtvk
இந்நிலையில் தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில், ஆனந்த் மஹிந்திரா தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவது குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விடாமுயற்சி மற்றும் மனவுறுதி கொண்ட பிர்ஜு ராமுக்கு டெல்லியில் உள்ள EV சார்ஜிங் யார்டுகளில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ள நற்செய்தியை ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருக்கிறார். மேலும் பிர்ஜு ராம் சில அதிகாரப்பூர்வ ஆவணங்களில் வாயால் பேனாவை பிடித்தும் கையெழுத்திடும் போட்டோ மற்றும் பணிநியமன ஆணையை வழங்கும் போட்டோ அந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.
There have been many follow up videos and negative ‘revelations’ about this gentleman on YouTube But I want to thank Ram and @Mahindralog_MLL for employing Birju Ram at one of our EV charging yards in Delhi. EVERYONE deserves a break… https://t.co/pBpH6TpgnBpic.twitter.com/mJHYKvjzBZ
யூடியூப்பில் இந்த மனிதரைப் பற்றி பல ஃபாலோ-அப் வீடியோக்கள் வந்துள்ளன. ஆனால் டெல்லியில் உள்ள எங்களின் EV சார்ஜிங் யார்டு ஒன்றில் பிர்ஜு ராமை வேலைக்கு அமர்த்தியதற்காக ராம் மற்றும் Mahindra Logistics Ltd.-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று மஹிந்திரா அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். மஹிந்திரா குழுமம் மற்றும் ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவும் முயற்சியும் நெட்டிசன்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.