• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’சார் நான் பொண்ணு இல்ல’ 10 வயது சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்த் மஹிந்திரா!

’சார் நான் பொண்ணு இல்ல’ 10 வயது சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்த் மஹிந்திரா!

Anand Mahindra

Anand Mahindra

சிறுவன் நீலகண்டனின் திறமையை வெகுவாக பாராட்டி வரும் நெட்டின்கள், ஆனந்த் மஹிந்திராவின் மாண்பையும் புகழ்ந்து வருகின்றனர்.

  • Share this:
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, திறமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தவறாதவர். குறிப்பாக, சமூகவலைதளங்களில் பரவும் திறமையாளர்களின் வீடியோவை பார்க்க நேர்ந்தால், உடனடியாக அந்த வீடியோவை ஷேர் செய்து, அவர்களை பாராட்டிவிடுவார். அண்மையில், கேராளவைச் சேர்ந்த களரிப்பயிற்று வீரரான 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானது. அசாத்தியமாக களரிப்பயிற்று செய்யும் அவரின் திறமையை இணையவாசிகள் வெகுவாக பாராட்டினர். அந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திராவும் பார்த்து, தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். நன்கு முடியை வளர்த்து, பார்ப்பதற்கு சிறுமியைப் போல அந்த சிறுவன் இருந்ததால், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘யாருப்பா இந்த சின்னப் பொண்ணு, அவளோட வழியில யாரும் சென்றுவிடாதீங்க’ என புகழந்திருந்தார்.

மேலும், கேரளாவின் பாரம்பரியக் கலையான களரிப்பயிற்றுக்கு உலகளவில் உரிய முக்கியத்துவம் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனந்த் மஹிந்திராவின், பாராட்டுக்கு நன்றி தெரிவித்த சிறுவன், ’சார் நீங்க கூறியதில் சின்ன கரெக்ஷன், நான் சிறுமி அல்ல, 10 வயது சிறுவன். களரிப்பயிற்று தொடர்பான குறும்படம் ஒன்று எடுக்க உள்ளோம். அதற்காக, முடியை நீளமாக வளர்ந்துக் கொண்டு வருகிறேன்" எனத் தெரிவித்தார்.



அந்த சிறுவனின் பெயர் நீலகண்டன் நாயர். ஏகவீர களரிப்பயிற்று அகாடமியில் (Ekaveera Kalaripayattu Academy) பயிற்சி பெற்று வருகிறார். சிறுவனின் ரிப்ளைவை பார்த்த அனந்த் மஹிந்திரா, உடனடியாக தன்னுடைய கவனக்குறைவுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். "என்னுடைய பிழைக்கு ஆயிரம் மன்னிப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் உங்களுடைய திறமையை மெச்சியதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. நீங்கள் அசாத்திய திறமை படைத்தவராக இருக்கிறீர்கள். இப்போதும், சொல்கிறேன், உங்களுடைய வழியில் யாரும் குறுக்கிட்டுவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகள், உங்களைப் போன்ற திறமையாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.



சிறுவன் நீலகண்டனின் திறமையை வெகுவாக பாராட்டி வரும் நெட்டின்கள், ஆனந்த் மஹிந்திராவின் மாண்பையும் புகழ்ந்து வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டவர். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது அந்நாட்டு அணியை வீழ்த்தி வராலாற்று சாதனைப் படைத்ததை ஆனந்த் மஹிந்திரா பெருமையாக கொண்டாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், அந்த தொடரில் பங்கேற்று விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ’மஹிந்திரா தார்’ அன்பளிப்பாக கொடுத்து நெகிழ வைத்தார். இங்கிலாந்து அணியை, சொந்த மண்ணில் வீழ்த்தியதற்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். குறிப்பாக, அக்சர் படேல், அஷ்வின் ஆகியோரின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: