முகப்பு /செய்தி /இந்தியா / அக்னிபத் போராட்டம் எதிரொலி - அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக இரு தொழிலதிபர்கள் உறுதி

அக்னிபத் போராட்டம் எதிரொலி - அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக இரு தொழிலதிபர்கள் உறுதி

அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஷ் கோயங்கா

அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஷ் கோயங்கா

முன்னணி தொழிலதிபர்களான ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஷ் கோயங்கா, அக்னிபத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் இளைஞர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ராணுவத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு கூறும் நிலையில், இந்த வேலைத் திட்டத்தின் அம்சங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும். பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், ராணுவ பணியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் போராட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள நாட்டின் முன்னணி தொழிலதிபர்களான ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஷ் கோயங்கா, அக்னிபத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் இளைஞர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்றுள்ளனர்.

இது தொடர்பாக மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பதிவில், 'அக்னிபத் திட்டம் தொடர்பாக நடைபெறும் வன்முறை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்தாண்டு இந்த திட்டம் தொடர்பான பேச்சு தொடங்கிய போது, ஒழுக்கம் மற்றும் திறன் கொண்ட இளைஞர்கள் அக்னி வீரர்களாகச் சிறந்த வேலைத் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள் எனக் கூறினேன். இந்த திட்டத்தில் பயிற்சி பெற்று வெளியேறும் தகுதியான இளைஞர்களுக்கு மகேந்திரா குழுமம் பணிபுரிய நல்ல வாய்ப்பை தரும்' என்றுள்ளார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 4வது முறையாக ராகுல் காந்தி ஆஜர்

ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்டை தொடர்ந்து, ஆர்பிஜி நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்காவும், 'ஆர்பிஜி குழுமத்தில் அக்னி வீரர்கள் பணிபுரிய நல்ல வாய்ப்பு வழங்கப்படும். மற்ற கார்பரேட் நிறுவனங்களும் இது போன்று இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க முன்வரும் என நம்புகிறேன்' என்றுள்ளார்.

First published:

Tags: Anand Mahindra