பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி... கவுன்சிலரிடம் முறையிடும் போதே மாரடைப்பில் உயிரிழப்பு!

பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி... கவுன்சிலரிடம் முறையிடும் போதே மாரடைப்பில் உயிரிழப்பு!
உயிரிழந்த மூதாட்டி சரஸ்வதி தாஸ்
  • News18
  • Last Updated: December 4, 2019, 3:14 PM IST
  • Share this:
மேற்குவங்கத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருவர் கவுன்சிலரிடம் முறையிடும் போது மாரடைப்பில் உயிரிழந்தார்.

ஹஸ்ரா சாலை கவுன்சிலர் டெபாசிஷ் குமார்  தனது பகுதி மக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அங்கு வந்த 63 வயதான சரஸ்வதி தாஸ், தனது மகள்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்துவிட்டதாகவும், ஆனாலும் பணம் கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட கவுன்சிலர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார். அப்போது, சரஸ்வதி திடீரென மயங்கி விழ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Also see...
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading