ஹோம் /நியூஸ் /இந்தியா /

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் - தரையிறங்க விடாமல் ராணுவம் விமானத்துடன் வழியனுப்பிய இந்தியா!

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் - தரையிறங்க விடாமல் ராணுவம் விமானத்துடன் வழியனுப்பிய இந்தியா!

மஹான் ஏர் விமானம் மாதிரிப்படம்

மஹான் ஏர் விமானம் மாதிரிப்படம்

ஈரான் பயணிகள் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக வந்த தகவலின் படி இந்தியாவில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்தியா தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஈரானில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக வந்த தகவலின் படி டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஈரான் விமானம் அதனை ஏற்காததையடுத்து இந்திய ராணுவ விமானங்கள் உதவியுடன் ஈரான் விமானம் இந்திய வான்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

  மகான் ஏர் விமானம் ஈரான் தெஹ்ரான் பகுதியில் இருந்து பயணிகளுடன் இந்தியா வழியாகச் சீனா குவாங்சூ பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த விமானத்தில் வெடி குண்டி இருப்பதாக டெல்லி காவல்துறையிடமிருந்து காலை 9.20 மணிக்கு டெல்லி விமான நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதே நேரத்தில் ஈரான் விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் தரையிறங்க அனுமதி கேட்டது.

  விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறை ஈரான் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்ததுடன் விமான பாதையை ஜெய்ப்பூர்க்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஆனால் ஈரான் விமானத்தில் விமானி அதனை ஏற்காத நிலையில் இந்திய ராணுவத்தின் ஜெட் விமானங்கள் மூலம் அந்த விமானத்தில் பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

  இதற்காக இந்திய விமானப் படையின் su-30MKI போர் விமானங்கள் ஜோத்பூர் மற்றும் பஞ்சாப் விமான தளத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  Also Read : மாயமான இளைஞர்..கால்வாயில் கிடந்த பைக்.. வீட்டினுள் புதைக்கப்பட்ட சடலம் - பாபநாசம் பட பாணியில் அரங்கேறிய கொலை

  விமான போக்குவரத்து கட்டுப்பாடு தகவலின் படி, மகான் ஏர் விமானம் அவசரக் கால நடவடிக்கையாகத் தரையிறங்க டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் வெடி குண்டு மிரட்டல் காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஜெய்ப்பூரிலும் விமானம் தரையிறங்காமல் அப்படியே சீனாவை நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெடி குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல் எங்கு இருந்து வந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

  Published by:Janvi
  First published:

  Tags: Bomb, Delhi, Flight