”9 மணி நேரம் தூங்கினால் போதும்... 1 லட்சம் சம்பளம்...” வெளிநாட்டில் அல்ல... இந்தியாவில்தான் இந்த வேலைவாய்ப்பு

தூக்கத்திற்காக உலகின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய நபர்களைத்தான் தேடி வருகிறோம். அவ்வாறு வருபவர்களுக்கே முன்னுரிமை.

”9 மணி நேரம் தூங்கினால் போதும்... 1 லட்சம் சம்பளம்...” வெளிநாட்டில் அல்ல... இந்தியாவில்தான் இந்த வேலைவாய்ப்பு
தூங்கினால் 1 லட்சம் சம்பளம்
  • News18
  • Last Updated: November 29, 2019, 12:24 PM IST
  • Share this:
பலருக்கும் கனவு வேலை என்பது நிச்சயம் இருக்கும். அந்த கனவு வேலையே கையில் கிடைத்தாலும் தூக்கத்தை விட்டுவிட்டு வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் செய்வோமா..?

ஆனால் இங்கு ஆழ்ந்து தூங்கி கனவு கான்பதே வேலை என்கிறது வேக் ஃபிட் நிறுவனம். அதற்கு ஒரு லட்சம் வரை சன்மானமும் தருகிறது.

ஒன்பது மணி நேரம் 100 நாட்கள் பஞ்சு மெத்தை, குளுகுளு ஏசியில் தூங்குவதுதான் உங்களுடைய வேலை. இதற்கு தூங்குவதில் ஆசை, ஆர்வம், காதல் என இந்த தகுதிகள் இருந்தால் போதும். உங்களுக்கு உடனே அப்பாய்ன்மெண்ட் லெட்டர் ரெடி..!


இப்படி 'Wakefit Sleep Internship' என்கிற பெயரில் மனம் கவரும் வார்த்தைகளால் வேக் ஃபிட் நிறுவனம் விளம்பரங்களை பரப்பி வருகிறது.

அதில் தேர்வு செய்யும் நபர் அந்த நிறுவனத்தின் மெத்தையில் 100 நாட்களுக்கு தினமும் இரவு 9 மணி நேரம் படுத்து உறங்க வேண்டும். அதோடு அவர்களுக்கு நவீன ஃபிட்னஸ் கருவிகள், உடற்பயிற்சி, ஸ்லீப் டிராக்கர், நிபுணர்களின் கவுன்சிலிங் ஆகியவை வழங்கப்படும்.

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் தூங்குவதில் அவர்களுக்கு இருக்கும் காதல் , ஆசை குறித்து வீடியோ ஒன்றை எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு 100 நாட்கள் சிறப்பாக செய்து முடித்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் சன்மானமாக வழங்கப்படும்.”தூக்கத்திற்கு தீர்வு காணும் நிறுவனமான நாங்கள் மக்களை நிம்மதியான தூக்கத்திற்கு ஊக்குவிக்கவே இப்படியான பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். வேகமாக ஓடும் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் தூக்கத்தையும் தினசரி கடமையாக கடந்துவிடுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை யாரும் உணர்வதில்லை. அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். வாழ்க்கையின் தரத்தை பாதிக்கும்” என்று வேக் ஃபிட் நிறுவனத்தின் இணை இயக்குநர் சைத்தன்யா ராமலிங்கவுடா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் “ நாங்கள் தூக்கத்திற்காக உலகின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய நபர்களைத்தான் தேடி வருகிறோம். அவ்வாறு வருபவர்களுக்கே முன்னுரிமை” என்றும் கூறியுள்ளார்.

தூங்குவதில் அதிக ஆர்வம் உங்களுக்கு இருக்கா...? நீங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால்  Wakefit இதை கிளிக் செய்யுங்க...
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்