அசுத்தமான நீரை குடிப்பதால் ஒரு கிராமமே முதுகு தண்டுவடம் பாதிப்புடன் அவதி!

அசுத்தமான நீரை குடிப்பதால் ஒரு கிராமமே முதுகு தண்டுவடம் பாதிப்புடன் அவதி!
தண்டுவடம் பாதிப்புடன் அவதிப்படும் மக்கள்
  • News18
  • Last Updated: November 27, 2019, 12:44 PM IST
  • Share this:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அசுத்தமான தண்ணீர் குடித்து வந்ததால் ஒரு கிராமமே முதுகு தண்டுவடம் பாதிப்புடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

பலாமு மாவட்டத்தில் உள்ள சுக்குரு என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் ஃப்ளோரைடு என்னும் வேதிப்பொருள் அதிகம் கலந்துள்ள தண்ணீரை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பருகி வருகின்றனர்.

அசுத்தமான குடிநீரால் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன் முதுகு தண்டவடம் இழந்து நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இளைஞர்கள் பலரும் இறந்து இருப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.


இந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், மாற்றுதிறனாளிகள் வேறு எங்கே சென்று எப்படி வாழ முடியும் என்றும் இக்கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading