நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள்: ரூ.201 கோடி பி.எம். கேர்ஸ் நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள்: ரூ.201 கோடி பி.எம். கேர்ஸ் நிதி ஒதுக்கீடு

மருத்துவ ஆக்சிஜன் ஆலை மாதிரிப் படம்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ வினியோக நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் என அறிவிப்பு.

 • Share this:
  நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக, குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியமான பி.எம். கேர்ஸ் பண்டுடில் இருந்து 201.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் மாதம் ‘பி.எம்., கேர்ஸ் பண்டு’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்சினைகளை சமாளிக்கவும், நிவாரண உதவி வழங்கவும் இது உருவாக்கப்பட்டது. இந்த நிதியத்திற்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடைகளைகளை வழங்கினர்.

  இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார அமைப்புகளில் 162 பிரத்தியேக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக ‘பி.எம். கேர்ஸ் பண்டு’ நிதியில் இருந்து 201.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதில், ரூ.137.33 கோடி ஆலைகளை அமைப்பது, ஆக்சிஜன் வினியோக திட்டங்களை செயல்படுத்துவதற்கு செலவிடப்படும் என்றும், மீதமுள்ள ரூ.64.25 கோடி ஆலைகளை பராமரிக்கும் வருடாந்திர ஒப்பந்தத்துக்கும் செலவிடப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ வினியோக நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரசு மருத்துவமனைகள், சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 154.19 மெட்ரிக் டன் திறன் கொண்ட 162 ஆலைகள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: