2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் என்பவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று துமன்கஞ்ச் என்ற இடத்திற்கு தனது காரில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றிருந்தார்.
அப்போது துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். இதனையறியாத அவர் காரில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
⚠️Trigger warning : Disturbing Visuals.
Clear CCTV footage of what unfolded during the shootout in #UttarPradesh's #Prayagraj which claim life of #UmeshPal, main witness in 2005 murder of #BSP MLA #RajuPal. Multiple shooters ambushed Umesh Pal.#UPModel #UPPolice #HateCrime pic.twitter.com/gUIkfCk8jl
— Hate Detector 🔍 (@HateDetectors) February 25, 2023
இந்த கொடூர தாக்குதலில், உமேஷ் பால் மற்றும் அவருக்கு பாதுகாப்பில் இருந்த காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உமேஷ் பாலின் மனைவி அளித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி அடிக் அகமது அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gun shot, Murder case, Shot dead, Uttar pradesh