பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா., ஐ.ஏ.எஸ் நியமனம்..

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா., ஐ.ஏ.எஸ் நியமனம்..
அமுதா -ஐஏஎஸ்
  • Share this:
பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 இணை செயலாளர்களை நியமனம் செய்து மத்திய அமைச்சரவையின் பணியாளர் நியமன செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

நியமிக்கப்பட்ட இணைச் செயலாளர்களுள் ஒருவராக, தமிழகத்தை சேர்ந்த அமுதாவும் இடம் பிடித்துள்ளார். 1994-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும், தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ள அமுதா, நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பை பெற்றவராவார்.


மேலும் படிக்க:-

ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: சரணடைந்த 11 பேர் - பதற்றத்தில் கடலூர்..

மேலும் இவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பொறுப்பாக செய்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading