முகப்பு /செய்தி /இந்தியா / பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விலை!

பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விலை!

பால் விலை உயர்வு

பால் விலை உயர்வு

Amul Milk hike : பிரபல அமுல் நிறுவனத்தில் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் விலை அமலுக்கு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல பால் மற்றும் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் பாலின் அனைத்து வகைகளின் விலையை அதிகரித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) அறிவித்துள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) அமுல் பால் வகைகளை விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் அமுலின் அனைத்து வகை பால்களின் விலையை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதன் படி லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப் பட்டியல் படி அமுல் தாசா 500 ml பால் 27 ரூபாய்க்கும், 1 லிட்டர் பால் ரூ.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமுல் தாசா 2 லிட்டர் மற்றும் 6 லிட்டர், ரூ.108 மற்றும் ரூ.324 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அமுல் கோல் 500 ml பால் 33 ரூபாய்க்கும் 1 லிட்டர் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6 லிட்டர் பால் ரூ.396 ஆக விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read : அரசியல் ஆட்டம்.. ஷூ பரிசு.. சந்திரசேகர ராவுக்கு குடைச்சல் கொடுக்கும் ஜெகன் மோகன் சகோதரி சர்மிளா!

அமுல் பசும் பால் 500 ml ரூ28 ஆகவும் 1 லிட்டர் ரூ56 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமுல் எருமைப் பால் 500 ml ரூ35, 1 லிட்டர் ரூ.70 மற்றும் 6 லிட்டர் ரூ.420 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிக்கப்பட்ட விலை இன்று (03.02.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Amul, Milk, Price hiked