ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடு முழுவதும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய பிரபல பால் நிறுவனம்.. ஒரு மாநிலத்தில் மட்டும் இல்லை

நாடு முழுவதும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய பிரபல பால் நிறுவனம்.. ஒரு மாநிலத்தில் மட்டும் இல்லை

பால் விலை உயர்வு

பால் விலை உயர்வு

குஜராத் தவிர பிற மாநிலங்களில் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

பிரபல பால் நிறுவனமான அமுல், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கம் மூலம் நாடு முழுவதும் அமுல் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பால் பொருட்கள் விற்பனை நிறுவனமாக அறியப்படும் அமுலின் நடப்பு ஆண்டு வருவாய் 52 ஆயிரம் கோடி ஆகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பால் விலையை 2 ரூபாய் வரை அமுல் நிறுவனம் உயர்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமுல் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  குஜராத் மாநிலம் தவிர்த்து பிற இடங்களில் அதிக கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் பாக்கெட்டுகள் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கிடையாது... அவசர சட்டம் இயற்றிய மாநிலம்

அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகரித்திருப்பதை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வையடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு ரூ.61லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது.  அமுல் நிறுவனத்தை தொடர்ந்து மதர் டைரி நிறுவனமும் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

First published:

Tags: Amul, Milk