Home /News /national /

பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு... பிரபல தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு

பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு... பிரபல தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு

பால்

பால்

அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு(GCMMF) அமுல் பால் விலை உயர்வை அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பால் உற்பத்தியில் முக்கிய நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்து உள்ளனர். பால் உற்பத்தி மற்றும் மாட்டுத் தீவனத்திற்குச் செலவிடப்படும் அளவு அதிகரித்த காரணத்தினால் விலை உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு(GCMMF) அறிவித்த அறிக்கையில் 4% அதாவது லிட்டருக்கு 2 ரூபாய் அமுல் பாலின் விலை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் மதர் நிறுவனமும் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பதாகக் கூறியுள்ளனர். இந்த விலை ஏற்றம் 17ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

    அமுல் நிறுவனத்தின் புதிய விலை ஏற்றத்தின் படி அமுல் கோல்ட் 500 மில்லி லிட்டர் 31 ரூபாய்க்கும், அமுல் தாசா 500 மில்லி லிட்டர் 25 ரூபாய்க்கும், அமுல் சக்தி 500 மில்லி லிட்டர் 28 ரூபாய்க்கும் விற்கப்படும். இதே போல் மதர் நிறுவனத்தின் புதிய விலை படி முழு கிரீம் பால் லிட்டர் 61 ரூபாய்க்கும், டோன்ட் பால் லிட்டருக்கு விலை ரூ.51 ஆகவும், டபுள் டோன்ட் பால் லிட்டருக்கு ரூ.45 ஆகவும் உயரும். மேலும் பசும் பால் லிட்டருக்கு 53 ஆக உயர்கிறது.

    குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு இந்த விலை உயர்வைப் பற்றி வெளியிட்ட அறிக்கையில், இந்த விலை உயர்வுக்குக் காரணம், ஒட்டுமொத்த இயக்கச் செலவு மற்றும் பால் உற்பத்தியின் செலவு அதிகரிப்பு, மேலும் கால்நடை தீவன செலவு அதிகரிப்பு என்று தெரிவித்துள்ளது. கால்நடை தீவன செலவு மட்டும் போன ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Also Read: இன்றும் யார் வீட்டிலாவது தேசியக் கொடி பறக்குதா...தேசியக்கொடியை எப்படி மடித்துப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் !

    அமுல், பால் மற்றும் பால் பொருட்களுக்காக நுகர்வோர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயில் கிட்டத்தட்ட 80 பைசாவைப் பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுவனத்தின் கொள்கையாகக் கொடுக்கிறது. இந்த விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களின் பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் மதர் நிறுவனமும் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

    குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின் படி அமுல் பாலின் புதிய விலை உயர்வு அகமதாபாத், குஜராத்தின் சௌராஷ்டிரா, டெல்லி-NCR, மேற்கு வங்காளம், மும்பை மாநிலங்களில் மற்றும் அமுல் பால் விற்கப்படும் அனைத்து இடங்களிலும் 17ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Amul, Milk, Milk Production, Rate hike

    அடுத்த செய்தி