பல்கலைக்கழக எச்சரிகையையும் மீறி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அலிகார் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு எவ்விதமான தர்ணாவோ போராட்டமோ நடைபெறுவதற்கோ, கலந்துகொள்வதற்கோ, ஏற்பாடு செய்வதற்கோ அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாணவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என அலிகார் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 100 மீட்டர் தூரத்தை அளந்து பார்த்துதான் உட்கார்ந்திருக்கிறோம் என மாணவர்கள் தெரிவித்துவிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இனைந்து மனிதச் சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஜேஎன்யூ தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் இந்த மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் பார்க்க: தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தைக் காண ஒரு தியேட்டரையே புக் செய்த அகிலேஷ் யாதவ்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.