Home /News /national /

பிரம்மா மகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பாடம் நடத்திய பேராசிரியர்- எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்

பிரம்மா மகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பாடம் நடத்திய பேராசிரியர்- எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்

அலிகார் பல்கலைக்கழகம்

அலிகார் பல்கலைக்கழகம்

புராணங்களில் இந்து கடவுள்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக பாடமெடுத்த அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜிதேந்திர குமார் என்ற பேராசிரியர் மருத்துவ கல்லூரி பிரிவில் பணியாற்றிவருகிறார். இவர் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக வகுப்பில் நடந்துகொண்டதாக கூறி மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் பாடம் எடுக்கையில், 'இந்திய புராண கதைகளில் பாலியல் வன்புணர்வு' என்ற தலைப்பில் ஸ்லை்ட் ஷோ வகுப்பு எடுத்துள்ளார். அதில், பிரம்மா, இந்திரன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர் என்ற கருத்தில் பாடம் எடுத்துள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளத்திற்கு எடுத்துச் சென்று பேராசிரியர் ஜிதேந்திராவை மாணவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

    இந்த விவகாரம் கல்வி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பேராசிரியரை இடை நீக்கம் செய்துள்ள நிர்வாகம், பேராசிரியருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. "இதுபோன்ற நிகழ்வுகளை பல்கலைக்கழகம் ஒருபோதும் ஏற்காது. இது தொடர்பாக பேராசிரியர் 24 மணிநேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதை விசாரிக்க இரு நபர் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம். பேராசிரியர் ஜிதேந்திர குமார் சம்பவம் தொடர்பாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியுள்ளார்" என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்மையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகக்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ராமர் மற்றும் சீதையின் படத்தில், ராமரின் இடத்தில் தனது படத்தையும், சீதையின் இடத்தில் தனது மனைவியும் வைத்து கண்காட்சியில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி