மும்பையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக 3 சதவீதம் அளவுக்கு விவாகரத்து நடைபெறுவதாக கூறிய முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருத் ஃபட்னாவிஸ் கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மகராஷ்டிராவில் தற்போது, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்த கூட்டணி அரசு ஆட்சி செய்துவருகிறது. சிவசேனா கட்சியையின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், "நான் இதை ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். நான் வெளியே சென்றவுடன் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் உட்பட பல சிக்கல்களைப் பார்க்கிறேன். போக்குவரத்து காரணமாக, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரம் செலவளிக்க முடியவில்லை. இதனால் மும்பையில் 3% விவாகரத்துகள் நடக்கின்றன என்று கூறியிருந்தார்.
இதற்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதூர்வேதி, 3% மும்பைவாசிகள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (IL)Logic award வழங்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்தவர்கள் இத்தகைய தகவல்களை படிக்காதீர்கள். அது உங்கள் திருமண வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மும்பையை விட பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதை குறிப்பிடும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
#WATCH: BJP leader Devendra Fadnavis' wife Amruta Fadnavis says, "I'm saying this as common citizen. Once I go out I see several issues incl potholes,traffic. Due to traffic,people are unable to give time to their families & 3% divorces in Mumbai are happening due to it." (04.02) pic.twitter.com/p5Nne5gaV5
— ANI (@ANI) February 5, 2022
ஒருசிலர் அம்ருதா ஃபட்னாவிஸிடம் அவரது கூற்று தொடர்பான தகவல்கள் உள்ளதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். பலர் அவரது கருத்தை ட்ரோல் செய்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். மும்பையில் 3% விவாகரத்துகள் மக்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதால் நடக்கிறது - விவாகரத்து வழக்கறிஞர்கள் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சிக்னலில் கடையை அமைத்தது ஏன் என்பது இப்போது விளங்குகிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பர்தா, காவி உடைகளால் சர்ச்சை: அதிரடி உத்தரவு பிறப்பித்த கர்நாடகா
மற்றொருவரோ இதேபோல், போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு, புனே, டெல்லியில் எத்தனை சதவீதம் விவாகரத்து நடைபெறுகிறது என்று தரவுகளை கேட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangaluru, Maharastra, Mumbai, Traffic