Home /News /national /

பிரதமர் மோடி திறந்து வைத்த ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

பிரதமர் மோடி திறந்து வைத்த ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

அம்ரிதா மருத்துவமனை

அம்ரிதா மருத்துவமனை

கேரளாவை சேர்ந்த ஆன்மிக குரு அம்மா என்கிற அம்ரிதாநந்தமயி தேவி இதனை நிறுவியுள்ளார். 130 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை டெல்லிக்கு அருகே உள்ள பரிடாபாத்தில் அமைந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Faridabad, India
    அம்ரிதா மருத்துவமனை தான் ஆசியாவின் மிகப்பெரிய தனியார் பல்நோக்கு மருத்துவமனை. இது ஹரியானா மாநிலம் பரிடாபாத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

    கேரளாவை சேர்ந்த ஆன்மிக குரு அம்மா என்கிற அம்ரிதாநந்தமயி தேவி இதனை நிறுவியுள்ளார். 130 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை டெல்லிக்கு அருகே உள்ள பரிடாபாத்தில் அமைந்துள்ளது. 

    அம்ரிதா மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:
    இது ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனை
    இந்த மருத்துவமனை ரூ. 4000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
    மருத்துவமனையின் மொத்த பரப்பளவு 130 ஏக்கர் ஆகும்
    டெல்லிக்கு மிக அருகில் கட்டப்பட்டுள்ளதால் வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் எளிதல் செல்ல வசதியாக அமைந்துள்ளது
    மருத்துவமனைக்குள் 4 நட்சத்திர ஹோட்டல், மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மறுவாழ்வு மையம், நோயாளிகளை கொண்டு செல்ல ஹெலிபேட் வசதி, நோயாளிகள் உறவினர்கள் தங்க 498 அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன
    இந்த மருத்துவமனையில் மொத்தம் 10,000 ஊழியர்களும் 800 மருத்துவர்களும் பணியாற்ற உள்ளனர்
    முதற்கட்டமாக 550 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, இன்னும் 18 மாதங்களில் அதை 750 அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆம் ஆண்டிற்குள் 2,600 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது
    54 சிசியு, ஸ்மார்ட் ஐசியு, 534 முக்கிய பராமரிப்பு படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது
    மருத்துவமனையில் 64 அதி நவீன அறுவை சிகிச்சை அறைகள் அமைக்கப்படவுள்ளன
    மினி மருத்துவமனை என புதிய முறை இதில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் தனி மருத்துவமனை போல இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும்
    81 வகையான பல்நோக்கு மருத்துவ பிரிவுகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படவுள்ளது
    வெளிநாட்டு நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: PM Narendra Modi

    அடுத்த செய்தி